அருவத்திரு மேனி
உருவத்திருமேனிகள் எடுத்தும், பரந்து மல்கும்
சோதியான் - உண்மை இலக்கணத்தில் எங்கும் நிறைந்த பேரறிவாகிய
அலகில் சோதியனாகிய சிவபெருமான், முடிசூட்டத் தனது திருவடி சூட்டத் துணிந்த தூயோன்
- நான் அவனுடைய திருவடிகளை எனது தலைமேற்
சூடிக்கொள்ள நினைக்கவே அவன் உன்னுடைய நினைப்பதனை
முடிக்கின்றோமென்று பாதமலர் சூட்டிய நின்மலனாவான்.
'பண்ணிடைத் தமிழ் ஒப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்'
அத்துவிதத்தன்மை விளங்குகின்ற இத்தகைய திருமுறைத் திருவாக்குகள்
பலவுள. உருவத்திருமேனியும் அருவத்திருமேனியும் இறைவனுக்குப் பொது
இலக்கணம். பரந்து மல்கும் சோதியான் இறைவனது சிறப்பிலக்கணம். 'நில
வுலாவிய நீர்மலி வேணியன்' எனத் தடத்தலக்கணமும், 'அலகில்
சோதியன்' எனச் சொரூப இலக்கணமுஞ் சேக்கிழார் கூறியமை காண்க.
(5)
6. |
கனத்தாள்வெங்
கயமுகனும் கந்தனும்சம் பந்தனும்பா
லுண்ட கும்பத்
தனத்தாளே யறம்வளர்த்த கரத்தாளே திரிபுரங்கள்
தழலாய் வேவச்
சினத்தாளே சிறியோர்கள் செய்தபிழை பொறுத்திரக்கஞ்
செய்யுஞ் செய்ய
மனத்தாளே நின்கமல மலர்த்தாளே யென்றலைமேல்
வைத்தாள் வாயே. |
(இ
- ள்.) கனம் தாள் வெங் கயமுகனும் கந்தனும் சம்பந்தனும்
பால் உண்ட கும்பம் தனத்தாளே - பெருமை தங்கிய பாதங்களை யுடைய
விரும்பத்தக்க யானைமுகப் பிள்ளையாரும் முருகனும் ஞானசம்பந்தனும்
பால் பருகிய குடம் போன்ற கொங்கைகளை யுடையவளே, அறம் வளர்த்த
கரத்தாளே - முப்பத்திரண்டு தருமங்களையும் பெருகச் செய்த கைகளை
யுடையவளே, திரிபுரங்கள் தழலாய் வேவ சினத்தாளே - முப்புரங்களும்
தீப்பற்றி வெந்துபோகும்படி சினந்தவளே, சிறியோர்கள் செய்த பிழை
பொறுத்து இரக்கம் செய்யும் செய்ய மனத்தாளே - சிற்றறியுடையோர்
செய்த குற்றங்களைப் பொறுத்து அவர்கள்மேல் இரக்கங் காட்டி
ஆட்கொள்ளும் திருந்திய மனமுடையவளே!, நின் கமலம் மலர் தாளே
என் தலைமேல் வைத்து ஆள்வாய் - உனது செந்தாமரை மலர் போன்ற
பாதங்களையே எனது தலைமேல் வைத்து என்னை யாண்டருள்வாய்.
கனத்தாள் என்ற அடை கந்தனுக்கும் சம்பந்தனுக்கும் கூட்டலாம்.
கக்சியில் வேளாளர் தந்த இருநாழி நெற்கொண்டு உமை முப்பத்திரண்டு
வகை அறமும் புரிந்தாள் என்பது வரலாறு. முப்புரங்களை அழிக்கத்
தொடங்கியபோது சிவபெருமான் உமையிடம் தன் வில்லைக் கொடுத்து
வலைக்கும்படி கூறினர் என்பதும், அவ்வாறே வளைக்க வளைத்த
வில்லைக் கண்டு சிவபெருமான் நகைத்தனர் என்றும் நகைத்தவுடன்
முப்புரமும் எரிந்தது என்பதும் கதை. அதனாற் சினத்தாளே' என்று
பார்வதியை விளித்தார்.
(6)
|