7. |
வையாம்பன்
முகத்தானை மறலியையோ டத்துரந்து
வாழ்வ தென்றும்
மெய்யாம்பன் முகத்தாலும் வேதத்து மாகமத்தும்
விரித்த தொன்றே
மொய்யாம்பன் முகத்தானைப் பொடியாகப் பொருதுவினை
முடித்து நீண்ட
கையாம்பன் முகத்தானைக் காலையினு மாலையினுங்
கருது வோர்க்கே. |
(இ
- ள்.) மொய் ஆம்பல் முகத்தானைப் பொடி ஆக பொருது
வினை முடித்து - போரில் கயமுகாசுரனைத் தூசியாகும்படி போர் செய்து
மற்றுமுள்ள சூரர் போரும் முடித்து (அதனால்), நீண்ட கை ஆம்பல்
முகத்தானைக் காலையினும் மாலையினும் கருதுவோர்க்கு - புகழ்
பெருகிய துதிக்கையையுடைய யானைமுகக் கடவுளைக் காலையும்
மாலையும் நினைத்து வணங்குவோர்க்கு, வை ஆம்பல் முகத்தானை
மறலியை ஓட துரந்து வாழ்வது என்றும் மெய் ஆம் - கூர்மையான
பற்களையுடைய முகம்பொருந்தியவன் ஆகிய கூற்றுவனை ஓடும்படி
துரத்திச் சிவலோகத்து வாழ்ந்திருப்பது எக்காலத்தும் உண்மையாம். பல்
முகத்தாலும் வேதத்தும் ஆகமத்தும் விரித்தது ஒன்றே - பல
இடங்களிலும் வேத நூல்களிலும் ஆகம நூல்களிலும் இது விளக்கமாகக் கூறப்பட்ட
செய்தி யொன்றே.
பிள்ளையாரை வணங்கியவர் பேரின்பம் பெற்று என்றும்
அழியாதிருப்பர் என்று கூறினர். இதனால் யானும் அவர் பாதம் வணங்கு
கின்றேன் என்பது எச்சம். தானை மறலி - சேனையையுடைய மறவி
யெனவும் கூறலாம். அங்ஙனம் கொள்ளின், சேனை என்பது கால
தூதுவரை யுணர்த்தும். ஆம்பல் - யானை. பல் + முகத்தானை - பன்
முகத்தானை யெனப் புணர்ந்தது.
(7)
8. |
பெருமையிலும்
கதிமையிலு முதுமையிலு முகிலெனவே
பிறங்கு மேனிக்
கருமையிலுங் கடுந்தறுகட் செம்மையிலும் வெம்மையிலுங்
கலங்கேன் காலா
எருமையிலும் வெள்ளாட்டுப் பால்போது மெனப்பிறரை
யெண்ணே னன்பால்
வருமையிலும் பொருமையிலும் வரதன்மகன்குகனுமென்றன் மனத்தி
லுண்டே. |
(இ
- ள்.) காலா - யமனே!, பெருமையிலும் கதிமையிலும் - உன்
பெருமையாலும், உன் விரைவினாலும், முகில் எனவே பிறங்கும் மேனி
கருமையாலும் - கார்மேகத்தைப்போல விளங்குகின்ற உன்னுடைய உடலின்
கரிய நிறத்தாலும், கடுந்தறுகட் செம்மையிலும் வெம்மையிலும் கலங்கேன் -
கொடிய கோபக்கண்ணின் சிவப்பாலும் வெப்பத்தாலும் நான் மனங்கலங்க
|