மாட்டேன். எருமையிலும்
வெள்ளாட்டு பால் போதும் எனப் பிறரை
எண்ணேன் - எருமைப்பாலினும் வெள்ளாட்டுப் பாலே போதும் என்று
நினைப்பவர்போல நானும் பெரும் செல்வர்களைக் கருதமாட்டேன், வரும்
மையிலும் - (முருகனைத் தாங்கி) வருகின்ற மயிலும், பொரும் ஐயிலும் -
(சூரரைப்) பொருது தொலைக்கும் வேற்படையும், வரதன் மகன் குகனும் -
சிவபெருமான் மைந்தனாகிய முருகனும், என் மனத்தில் உண்டு - எனது
மனத்தில் எக்காலமும் உள்ளன.
வேலும் மயிலும் முருகனும் என் மனத்துள் எப்போதும் இருக்கின்றன.
ஆதலால் யமனே! நான் உன் பெருமை முதலியவற்றைக் காணினும் சிறிதும்
மனங்கலங்கமாட்டேன். வெள்ளாட்டுப்பால் வீட்டிலிருக்க எருமைப்பால்
இரந்து உண்டு வாழ எண்ணுவோர் பலர். அவர்போல நான்
எண்ணமாட்டேன். 'போதுமென்ற மனமே பொன் செயு மருந்து' என்ற
பழமொழிப்படி எண்ணி வாழ்வேன். பெருஞ் செல்வர்பாற் போய்
இரந்துவாழ எண்ணமாட்டேன் என்பது கருத்து.
மையிலும் ஐயிலும் என்பன போலிகள் அகரம் ஐகாரமாயிற்று. இது போலி.
உண்டு என்ற குறிப்பு வினைமுற்று, பலவின்பாலுக்கு வந்தது. இது
பொதுவினை.
(8)
|
காளியம்மன்
வணக்கம்
|
9. |
அந்தரியா
மளைஅமலை ஆல காலி
அம்பிகைமா தரிசௌரி ஆளி யூர்தி
வந்தரிநான் முகன்வணங்கு மலர்த்தாட் சூரி
வைரவிதா ருகவைரி மதங்கி நீல
கந்தரியோ கினிசூலி நீலி நாக
கங்கணிசங் கரிவிமலை காளி வால
சுந்தரிசா முண்டிதிரி சூலி கோலத்
துணைஅடிஎன் முடிமீது சூடி னேனே. |
(இ
- ள்.) அந்தரி.........கௌரி - அந்தரி முதலிய ஏழு
திருநாமங்களை யுடையவளும், ஆளி ஊர்தி - யாளியை வாகனமாகக்
கொண்டவளும், அரி நான்முகன் வந்து வணங்கும் மலர்த்தாள் சூரி -
திருமாலும் பிரமாவும் வந்து வணங்குகின்ற தாமரை மலர்போன்ற
திருவடிகளையுடைய அச்சந்தருங் கோலம் பொருந்தியவளும்,
வைரவி........திரிசூலி - வைரவி முதலிய பதினான்கு திருப்பெயர்களை
யுடையவளுமாகிய காளியின், கோலத்துணை அடி - அழகிய இரண்டு
திருவடிகளை, என் முடிமீது சூடினேன் - என்னுடைய தலைமேற்
சூடிக்கொண்டேன்.
சூடினேன் + ஏ = சூடினேனே. இதில் ஏகாரம் ஈற்றசை. அந்தரி
-
மறைந்திருப்பவள். யாமளை - பசிய திருமேனியுடையவள். அமலை -
மலமற்றவள். ஆலகாலி - நஞ்சினையுடையவள். இவ்வாறே பெயர்கட்குக்
காரணம் இருக்கும் என அறிக.
(9)
|