|
அயோத்தி
நகர மதிலும் அகழியும்
கலி விருத்தம் |
74. |
மகர
தோரண வாயிலும் நாஞ்சிலும்
சிகர மாமதி லும்செறி பேரகழ்
சகரர் வான்புகழ் சாற்றும் அயோத்திமா
நகர மேன்மை சிறிது நடத்துவாம். |
(இ
- ள்.) மகர தோரண வாயிலும் நாஞ்சிலும் சிகர மாமதிலும்
- மகர தோரணங்கள் கட்டப்பட்ட வாயில்களும் மதில் உறுப்புக்களும்
அமைந்த உயர்ந்த பெரிய மதிலும், சகரர் வான்புகழ் சாற்றும் செறி பேர்
அகழ் - கடலைத்தோண்டிய சகரர்களுடைய பெரும் புகழை அறிவுறுத்தும்
மதிலை நெருங்கிய பெரிய அகழியும் சூழ்ந்த, அயோத்தி மா நகர
மேன்மை சிறிது நடத்துவாம் - அயோத்திமாநகரத்தின் சிறப்பினைச் சிறிது
சொல்லத் தொடங்குவாம்.
சகர
புத்திரரால் கடல் தோண்டப்பட்டமையின் கடலுக்குச் சாகரம்
என்ற காரணப்பெயர் வந்தது. அகழியின் ஆழமும் அகலமும் கடலை
ஒத்திருந்தமை அதனைக் காண்பார்க்குக் கடலை நினைப்பூட்டிச் சகரர்
புகழைக் கருத்திற்குக் கொணரும் என்பது. நாஞ்சில் = மதி லுறுப்பு.
(1)
|
அயோத்தியில்
மாடமாளிகையும் கோயில்
கோபுரமும்
|
75. |
மாட
மாளிகை யும்மடைப் பள்ளியும்
கூட கோபுர மும்பெருங் கோயிலும்
ஆடு ரங்கும் அணிஅறச் சாலையும்
பாட லங்கரி வைகிய பந்தியும். |
(இ - ள்.)
மாடம் மாளிகையும் மடைப் பள்ளியும் கூட கோபுரமு
பெருங் கோயிலும் ஆடு அரங்கும் அணி அறச் சாலையும் பாடலம் கரி
வைகிய பந்தியும் - மாடங்களும் மாளிகைகளும் சமையல் வீடுகளும்
கூடங்களும் கோபுரங்களும் பெரிய கோயில்களும் நடன சபைகளும்
அழகிய அறச்சாலைகளும் குதிரைப்பந்தி யானைப்பந்திகளும் (எங்கும்
இருந்தன).
|