எங்கும் இருந்தன என்ற
சொல் வருவித்துப் பொருள் கொள்க. மாடம் -
மேல் மாளிகைகளை யுணர்த்தும். கூடம் - உச்சியையுடையது. ஆடு
அரங்கு = மங்கையர் நடனம் புரியும் மேடை. அறச்சாலை - அன்னமிடுதல்
முதலிய அறம் செய்யும் இடம்.
(2)
|
ஆடவரும்
மகளிரும் நெருங்கிச் செல்லும்
ஆவண
வீதி |
76. |
மார
னன்னவர் மாமயில் அன்னவர்
தார்அ டர்ந்த புயமும் தனங்களும்
நேர்அ டர்ந்து நெருக்கலின் வீழ்ந்தபொன்
ஆரம் மின்னுவ ஆவண வீதியே. |
(இ
- ள்.) ஆவண வீதி
- கடைத்தெரு எங்கும், மாரன் அன்னவர் மா
மயில் அன்னவர் தார் அடர்ந்த புயமும் தனங்களும் - மன்மதன் போன்ற
அழகிய ஆடவரின் மாலைகள் நெருங்கிய தோள்களும் அழகிய மயிலன்ன
சாயல் மகளிரின் கொங்கைகளும், நேர் அடர்ந்து நெருக்கலின் வீழ்ந்த
பொன் ஆரம் மின்னுவ - நேரே பொருந்திக் கூட்டமிகுதியால்
நெருக்குதலின் சிதறி விழுந்த பொன்னும் முத்தும் ஒளி வீசின.
மாரன்
அன்னவர் மாமயிலன்னவர் புயமும் தனங்களும் : நிர
னிறையணி. ஆரம்-முத்து. பொன் ஆரம் : உம்மைத்தொகை. ஏகாரம்
:
ஈற்றசை. காமன் போன்ற காளையரும் கலாப மயில் போன்ற காரிகையரும்
நெருங்கிச் செல்லும்போது கொங்கையும் மார்பும் அழுந்துவதால்
பொற்பணிகளும் முத்துமாலைகளும் அற்று விழும் எனவும்,
செல்வப்பெருக்குடையர் ஆதலால் அவற்றைத் தேடார் எனவும் அவைகள்
தெருவிற் கிடந்து ஒளி வீசும் எனவுங் கொள்க.
(3)
|
அகிற்புகை
அரிச்சந்திரன் புகழ்போல வான் ஓங்கல் |
77. |
அன்பு
தங்கும் மனத்தரிச் சந்திரன்
தன்பு கழ்க்கொழுந் தோங்கித் தழைத்தல்போற்
பொன்பு ணர்முலை யார்புலர்த் தும்மகி
லின்பு கைசென் றெழுமுக டெங்குமே. |
(இ
- ள்.) அன்பு தங்கும் மனத்து அரிச்சந்திரன் தன் புகழ்க்
கொழுந்து ஓங்கித் தழைத்தல் போல் - அன்பு குடிகொண்ட மனமுள்ள
அரிச்சந்திரப் பேர் அரசனின் புகழ் தளிர்த்து ஓங்கித் தழைத்தது போல,
பொன் புணர் முலையார் புலர்த்தும் அகில் இன் புகை முகடு எங்கும்
சென்று எழும் - பொன்னிறத் தேமல் பூத்த முலைகளையுடைய பெண்கள்
தங்கள் கூந்தலின் ஈரம் புலர்த்தும் அகிலின் நறுமணப்புகை எழுந்து
சென்று வான்முகடு போய் முட்டும்.
பெண்கள்
நீராடியதும் தங்கள் நீண்ட கூந்தல்களை அகிற்புகையில்
உலர்த்துவார்கள் : எதிர்நிலை உவமையணி. அரிச்சந்திரன் புகழும்
மண்ணுலகில் கொழுந்துவிட்டுத் தழைத்தோங்கி வானுலகு சென்று
முட்டினமையின் வானிலிருந்து முனிவர் வந்து அவன் மெய்ம்மையைச்
|