பக்கம் எண் :


44

சோதிக்கிறார்கள். ஏகாரம் : ஈற்றசை. அகிற்புகை பரந்து மண்ணுலகை
மூடி வானுலகத்தை மறைத்து நிற்பதற்கு அரிச்சந்திரன் புகழ் மண்ணும்
விண்ணும் பரந்து மூடியிருப்பதை உவமையாகக் கூறினர். இது
உவமையணி.
                                                     (4)

 
  ஆவண வீதியின் ஆர்ப்பொலி
78. சோனை ஆர்ப்பென ஊழி தொடர்ந்தெனச்
சேனை ஆர்ப்பன தேரொலி ஆர்ப்பன
வானை ஆர்த்துறும் வாம்பரி ஆர்ப்பன
ஆனை ஆர்ப்பன ஆவண வீதியே.

     (இ - ள்.) ஆவண வீதி - கடைவீதி எங்கும், சோனை ஆர்ப்பு
என - சோனைமழை பெய்யும்போது தோன்றும் இடி முழக்கம் போலவும்,
ஊழி தொடர்ந்து என - ஊழிக்காலம் வந்தது போலவும், சேனை ஆர்ப்பன
தேர் ஒலி ஆர்ப்பன வானை ஆர்த்துறும் வாம்பரி ஆர்ப்பன ஆனை ஆர்ப்பன - சேனையும் தேரும் வானளாவத் தாவும் குதிரைகளும்
யானைகளும் ஆரவாரஞ் செய்தன.

     என : என்ன என்ற உவம உருபின் தொகுத்தல். பரி, ஆனை : பால்
பகா அஃறிணைப்பெயர்கள். ஏகாரம் : ஈற்றசை. இடியொலி போலவும்
ஊழிக்காலம் வந்தது போலவும் தேர் பரி யானை சேனைகளின் ஆரவார
மிகுந்தன என்றார். இதுவும் உவமையணி.
                                                     (5)

 

  அயோத்தியில் இயல் இசை நடன ஒலி
79. வேத வோதை வியன்கலை யோதையின்
கீத வோதை கிளைஓதை ஆடுவார்
பாத வோதை பரிபுரத் தோதையாழ்
நாத வோதை நடப்பன நாளுமே.

     (இ - ள்.) வேத ஓதை வியன் கலை ஓதை இன் கீத ஓதை கிளை
ஓதை - வேத ஒலியும் பரந்த அறிவு விளக்கும் நூல் பயில் ஒலியும் இனிய
இசை ஒலியும் குழல் ஒலியும், ஆடுவார் பாத ஓதை பரிபுரத்து ஓதை யாழ்
நாத ஓதை - நடனமகளிரின் பாதச் சதங்கை சிலம்போசைகளும் யாழிசை
ஒலியும், நாளும் நடப்பன - அயோத்திநகரில் எந்நாளும்
ஒலித்துக்கொண்டேயிருக்கும்.

     ஏகாரம் : ஈற்றசை. செவ்வெண்ணும்மை தொக்கது. கிளை யோதை
- நரம்பின் ஒலி எனவும் பொருள் தரும். ஆயினும், யாழ் நாதம் என்று
பின் வருதலால் குழலிசை என்று பொருள் கூறப்பட்டது. கிளை - மூங்கில்.
கலை - நூல். இன் கீதம் - இனிய இசை, நாதம் - ஒலி. நாத வோதை :
இருபெயரொட்டுப் பண்பு.
                                                     (6)


  மக்களும் பறவைகளும் மன்னவன்
  
    வண்மையைப் பாடல
   
80. கிள்ளை பாடுவ கீதங்கள் சாரிகை
பிள்ளை பாடுவ வேதம் பிராமணர்