பக்கம் எண் :


45

கொள்ளை பாடுவர் இன்னிசைக் கோதையர்
வள்ளை பாடுவர் மன்னவன் வண்மையே.

     (இ - ள்.) கீதங்கள் கிள்ளை பாடுவ - பலவகைப் பண்களைக்
கிளிகள் பாடும், சாரிகை பிள்ளை பாடுவ - நாகணவாய்ப் பறவைகள்
பிள்ளைகள் மழலைச்சொற்களைப் பேசும், பிராமணர் கொள்ளை வேதம்
பாடுவர் - மறையோர் கூட்டத்தினர் நான்கு வேதங்களையும் பாடுவர்,
இன்னிசைக் கோதையர் - இனிய இசை பாடும் மாதர்கள், மன்னவன்
வண்மையே வள்ளை பாடுவர் - அந்நாட்டரசன் புகழையே வள்ளைப்
பாட்டி லியைத்துப் பாடுவர்.

     வள்ளை - உலக்கைப் பாட்டு. நெல் முதலியவை உரலிலிட்டுக்
குற்றும்போது பாடுகின்ற பாடல். "மனையளகு; வள்ளைக் குறங்கும்
வளநாட" என்பதும், சிலப்பதிகாரம் வாழ்த்துக்காதை இறுதியில்
வள்ளைப்பாட்ட என்ற தலைப்பில்,

     "தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம்
     பூங்காஞ்சி நீழ லவைப்பார் புகார்மகளிர்
     ...................பாவைமா ராரிக்கு பாடலே பாடல்"

என வரும் பாடல்களும் இதனை நன்கு விளக்கும்.
                                                     (7)

 
  நகரில் மங்கல வாழ்க்கையும் அமங்கல அகற்சியும்         உழைப்பின் உயர்வும்   
81. கூட லோங்குவ கோதையர் யாவர்க்கும்
ஊட லோங்குவ தவ்வை ஒருத்திக்கும்
ஆட லேங்குவ கண்ணுளர்க் கன்றன்றும்
பாட லோங்குவ நித்தலும் பாணர்க்கே.

     (இ - ள்.) கோதையர் யாவர்க்கும் கூடல் ஓங்குவ - குலமகளிர்
எல்லார்க்கும் தத்தம் நாயகரோடு கூடுதல் மென்மேலும் மிகும், தவ்வை
ஒருத்திக்கும் ஊடல் ஓங்குவ - மூதேவி ஒருத்திக்கு மட்டும் அவ்வூரில்
சேராது பிணங்கிச்செல்லுதல் மேலும்மேலும் அதிகரிக்கும், கண்ணுளர்க்கு
அன்று அன்றும் ஆடல் ஓங்குவ - நடிகையர்க்கு நாளுக்குநாள்
நடனத்தொழில் மிகும், பாணர்க்கு நித்தலும் பாடல் ஓங்குவ -
பாணர்களுக்கு நாள்தோறும் பாடல் தொழில் மேன்மையுறும்.

     மூதேவி நாளுக்கு நாள் ஊரைவிட்டு ஊடிச் செல்வள் என்றதனால்
சீதேவி நாளுக்குநாள் அங்கு இணங்கி மகிழ்ந்து கூடி வாழ்வாள் என்பது
பெற்றாம். உழைப்பாளர் - யாவர்க்கும் அவரவர் தொழில் விருத்தி
என்பதும் பெற்றாம். கோதையர் யாவர்க்கும் என்பது தவ்வை ஒருத்தி
எனப் பின் வருவதால் இளையவரைக் குறிக்கும் என்று கொண்டு
திருமகளின் கூறாகிய கோதையர் எண்மருக்கும் எனக் கொள்வது சிறப்பு.
செல்வ மங்கை, கல்வி மங்கை, வீர மங்கை; கொடை மங்கை, சந்தான
மங்கை, வெற்றி மங்கை, கருணை மங்கை, ஊக்க மங்கை என்ற எட்டு
மங்கையரும் திருவென்றே கூறப்படுவார். ஆதலால், மூத்தாள் ஆகிய
மூதேவிக்கு இளைய