|
தீத்தெய்வங்
கூறல் |
888. |
கற்பினின்
மிக்கவள் கன்னி நன்னெறிப்
பொற்பினன் மன்னன்யான் சுடவும் போதிலேன்
வெற்பினின் றருந்தவ வெளிஅ டக்கிநின்
சொற்படி மறுக்கிலேன் சுடுவன்யா னென்றான். |
(இ
- ள்.) அருந்தவ - அருந்தவம் செய்த முனிவரே!, கன்னி
கற்பினின் மிக்கவள் - கன்னியாகிய சந்திரமதி கற்பிலே சிறந்தவள்,
மன்னன் நன்னெறிப் பொற்பினன் - அரசன் நல்ல வழியாகிய
அழகுடையவன், யான் சுடவும் போதிலேன் - ஆதலால் யான் அவர்களைச்
சுடப் போதுமான ஆற்றல் இல்லாதவன், நின் சொற்படி மறுக்கிலேன் -
ஆதலால் உன் சொற்படி நான் மறுக்காதவனாய், வெற்பின் நின்று வெளி
அடக்கி யான் சுடுவன் என்றான் - மலையின் நின்று வெளியிடத்தை
அடக்கி யான் சுடுவேன் என்றான்.
கற்புநெறி
மங்கையரையும் நன்னெறி மன்னனையும் சுட்டுத்
துன்புறுத்தும் ஆற்றல் எனக்கு இல்லை என்பது விளங்க, 'நான் சுடவும்
போதிலென்' என்றான். 'நின் சொல்லை மறுக்கும் ஆற்றலும் இல்லேன்;
ஆதலாற் செல்வேன்' என்றான் தீக்கடவுள்.
(136)
889. |
இவ்வகை கேட்டபின்
முனிவன் ஏகினான்
அவ்வழி நீங்கியே அகல எய்திட
வெவ்வழன் மறித்தினி திருக்க வேந்தனும்
நவ்வியன் னாளுடன் நடந்து போயினான். |
(இ - ள்.) இவ்வகைகேட்டபின்
முனிவன் ஏகினான் - இவ்விதம்
நெருப்புக்கடவுள் கூறியதைக் கேட்டவுடன் முனிவன் சென்றான், அவ்வழி
நீங்கியே அகல எய்திட - அந்த இடத்தைவிட்டு நீங்கி அகன்று சென்று,
வெவ் வழல் மறித்து இனிது இருக்க - கொடிய நெருப்பாகிய கடவுள்
வழிமறித்துக்கொண்டு இனிதாக இருந்தபோது, வேந்தனும் நவ்வி
அன்னாளுடன் நடந்து போயினான் - மன்னனும் மான்போன்ற கண்களை
உடைய சந்திரமதியுடன் நடந்து அவ்வழியிற் சென்றான்.
இவர்கள் செல்லும் வழியில் தீக்கடவுள் சென்று
வழிமறித்து
நின்றான். மன்னன் முதலிய எல்லாரும் அவ்வழியே சென்றார்கள்.
(137)
890. |
வெறிகமழ்
சோலையும் வெற்பும் வெண்டிரை
எறிபுனற் பொய்கையும் நீங்கி ஏகியே
செறிகழை வனத்திடைச் செல்லச் சேணிடைப்
பொறிகளும் கரும்பெரும் புகையும் தோன்றின. |
(இ
- ள்.) வெறி கமழ் சோலையும் வெற்பும் வெண் திரை எறி
புனல் பொய்கையும் நீங்கி ஏகியே - மணம் வீசும் சோலைகளும்
மலைகளும் வெண்மையான அலைவீசுகின்ற நீர் நிறைந்த குளமும் கடந்து
விலகிச் சென்று, செறி கழை வனத்திடைச் செல்ல - நெருங்கிய மூங்கிற்
|