பக்கம் எண் :


588

     கவுசிகன் மக்கள் நூற்றுவரும் என்மேற் சினந்து கணைகளை ஏவி
நின்றனர். நான் சினத்துடன் விழித்தேன்; அச் சினத்தீயால் உடல்
வெடித்து இறந்தனர் என்றான்.
                                                    (14)

 
1204. சண்டத் தழலால் இவர்மைந் தர்படத்
   தனுவங் கையெடுத் தெதிர்வந் துகடுங்
கொண்டற் சரமா ரிபொழிந் திடவே
   கொடியோன் இவனுக் கெதிரா எனது
தண்டத் தினைநட் டனன்விட் டபெருஞ்
   சரமா ரிமழுக் கதைசக் கரம்வேல்
விண்டற் பவரும் பொடியாய் உதிர
   விசையா னசையோ டுவிழுங் கினதால்.

       (இ - ள்.) சண்டத்து அழலால் இவர் மைந்தர் பட - வேகமான
நெருப்பினால் இவருடைய மைந்தர்கள் இறந்ததனால், தனு அங் கை
எடுத்து எதிர் வந்து - கௌசிகன் வில்லைத் தன் கையிலே எடுத்துக்
கொண்டு எதிரிலே வந்து, கடுங் கொண்டல் சரமாரி பொழிந்திடவே -
கடுமையான மேகம்போல் அம்பு மழையைப் பொழிந்தபோது,
கொடியோன் இவனுக்கு எதிரா எனது தண்டத்தினை நட்டனன் -
கொடியவனாகிய இவனுக்கு எதிராக என்னுடைய தண்டத்தினை எடுத்து
முன்னாலே நட்டுவைத்தேன், விட்ட பெரும் சரமாரி மழு கதை சக்கரம்.
கோசிகன் செலுத்திய பெரிய அம்பு மழைகள் மழு கதை சக்கரம், வேல்
- வேல் முதலிய ஆயுதங்கள், விண்டு அற்பம் அரும் பொடியாய் உதிர
- பிளந்து சிறிய நுண்ணிய துகளாக உதிரும்படி செய்து, விசையால்
நசையோடு விழுங்கினதால் - வேகத்தோடும் விருப்பத்தோடும்
அவற்றைத் தண்டம் விழுங்கியது.

     கோசிகன் விட்ட கணை, மழு, கதை, சக்கரம், வேல் முதலிய
ஆயுதங்களையெல்லாம் பொடியாக்கி என் யோகதண்டம் விழுங்கிற்று
என்றான்.
                                                    (15)

 
1025. விடுகின் றகொடும் படையத் தனையும்
   விறல்கொண் டுயர்தண் டம்விழுங் கிடவே
அடுகின் றதெமக் கெளிதல் லவென
   வமரா மகவா சையடைந் துறவே
சுடுகின் றமனத் துடனூ ரணுகித்
   துறவோர் வலியோ ரிறையோ ரிலெனாக்
கொடுவெந் தொழினா டுதுறந் தகலக்
   குணபா லணுகித் தவமுற் றனனே.

     (இ - ள்.) விடுகின்ற கொடும் படை அத்தனையும் - கோசிகன்
விட்டகொடிய ஆயுதங்களையெல்லாம், விறல் கொண்டு உயர் தண்டம்
விழுங்கிடவே - வலிமை கொண்டு உயர்ந்த தண்டம் விழுங்கியதனால்,
அடுகின்றது எமக்கு எளிது அல்ல வென அமரா - இந்த முனிவரைக்