|
எவ்வா றகல்வேன்
இவணிற் பனென
இனிநீ கடிதே கிவணிற் றலுனக்(கு)
ஒவ்வா தெனயான் உரைசெய் திடவே
உயர்வா னிடைதே னுவுமுற் றதுவே. |
(இ
- ள்.) இவ்வாறு வெருட்டி வதைத்து எனை யுற்று - இவ்வாறு
அரசனுடைய சேனைகளை வெருளும்படி செய்து அழித்து என்னை
அடைந்து, இனி ஏது செயக் கடவேன் அடியேன் - அடியேன் இனி
மேல் என்ன செய்யவேண்டும், அவ்வாறு உரை என்ன - அவற்றை உரை
என்று கேட்டவுடன், யான் இனி நீ வான் மிசை அகல் என்ன - இனி நீ
வானுலகத்திற்குச் செல் என்று யான் கூறியவுடன், உனைத் தனிவிட்டு
எவ்வாறு அகல்வேன் இவண் நிற்பன் என - உன்னைத் தனியே விட்டு
எவ்வாறு செல்வேன் இங்கே உனக்குத் துணையாக இருப்பேன் என்று
கூற, இனி நீ கடிது ஏகு இவண் நிற்றல் உனக்கு ஒவ்வாது என யான்
உரை செய்திடவே - இனிமேல் நீ விரைந்து செல்வாயாக இங்கு நிற்றல்
உனக்குப் பொருந்தாது என நான் கூறியவுடன், உயர் வான் இடை
தேனுவும் உற்றதுவே - வானுலகத்திற்கு அக் காமதேனுவும் சென்றது.
கவுசிகன்
சேனைகளையெல்லாந் தொலைத்த காமதேனு, என்பால்
வந்து 'இனி நான் செய்வது யாது?' என்று கேட்க, 'வானுலகஞ் செல்' என
நான் வற்புறுத்திக் கூறியவுடன் அப் பசு வானுலகஞ் சென்றது.
(13)
1203. |
அமரா வதியிற்
பசுவெய் திடவே
யரசன் குலமைந் தர்கணூற் றுவரும்
எமதா விகொளக் கருதிச் சினமுற்
றிடிபோ லமுழக்க மெழக்கு முறிச்
சமரா டல்தொடங் கிநெடும் பொழுதிற்
சரமா ரிபொழிந் திடலும் உடலும்
கமரா கவெடித் துவிழித் தவிழிக்
கனலால் அவர்வெந் துகழிந் தனரே. |
(இ - ள்.) அமராவதியிற் பசு எய்திடவே
- தேவருகத்துத்துத்
தலை நகரமான அமராவதி நகரத்தில் பசு சென்று அடைந்தவுடன்,
அரசன் குல மைந்தர்கள் நூற்றுவரும் - கௌசிக மன்னனுடைய
பிள்ளைகள் நூற்றுவரும், எமது ஆவி கொளக் கருதி - எம்முடைய
உயிரைக் கொள்ளுவதற்கு எண்ணி, சினம் உற்று இடி போல முழக்கம்
எழக் குமுறி - சினம் கொண்டு இடிபோல் பெருமுழக்கம் செய்துகொண்டு
ஆரவாரம் செய்து, சமர் ஆடல் தொடங்கி நெடும் பொழுதில் சரமாரி
பொழிந்திடலும் - போர் செய்ய முனைந்து நெடுநேரம் அம்பு மழை
பொழிந்தவுடன், விழித்த விழிக் கனலால் - நான் கண் விழித்துப் பார்த்த
அந்த விழி நெருப்பால், அவர் உடலும் கமர் ஆக வெடித்து -
அவர்களுடைய உடம்பு நிலப்பிளப்புப்போலப் பிளந்து, வெந்து கழிந்தனர்
- கருகிச் சாம்பலாய்ப் போனார்கள்.
|