பக்கம் எண் :


586

கொன்றபோது, வேலாளரும் வெங் கரி வித்தகரும் வில்லாளரும் வெம்
பரி வீரர்களும் - வேல் பிடித்தவரும் யானை வீரரும் விற்பிடித்த வீரரும்
குதிரை வீரரும், காலால் மிதி பட்டவர் கோடியர் - காலினால் மிதிபட்டு
இறந்தவர் கோடிக்கணக்கானவர் ஆவர், கண் கனலால் எரி பட்டவர்
கோடியர் - கண் நெருப்பால் எரிந்து சாம்பரானவர் கோடிக்கணக்கானவர்,
நீள் வாலால் அடிபட்டவர் கோடியர் - நீண்ட வாலினால் அடிபட்டு
இறந்தவர் கோடிக்கணக்கினர், வெண் மருப்பால் வதை யுண்டவர்
கோடியரே - வெமயான கொம்பினால் இறந்தவர் கோடிக்கணக்கானவர்
ஆவர்.

     ஆவின் இனம் அமைதியுடையவேனும் சினமுற்றபோது அழிக்கும்
ஆற்றல் உடையது "ஆவின் அமைதியை நம்பாதே" என உலகோர்
கூறுவர். இதுவோ தெய்வப் பசு; சினமூண்டது; அதனால் அஃது அக்
கவுசிகன் படை முழுவதையும் கொன்று குவித்தது. விண்ணுலகப் பசு
மண்ணுலக மக்களுக்கு வசப்படுமோ! இதனையறியாமல் மயங்கிப் பிடிக்க
முயன்றது பேதைமையாம்.
                                                      (11)

 
1201. கொழுவோ டுதிரந் தசையீ ரனிணம்
   குடர்மூ ளைசரிந் துகுழைந் திடுவார்
மழுவாள் சிலைதண் டுகடைத் தலைவேல்
   வலயங் கரவா ளமொடிந் திடுவார்
விழுவார் கரைவார் உருள்வார் புரள்வார்
   விதியே சதியா கவிளைத் தனையென்
றழுவார் தகவல் லதுசெய் தநமக்
   கழிவே யெனவோ டியகன் றனரே.

       (இ - ள்.) கொழுவோடு உதிரத் தசை ஈரல் நிணம் -
கொழுப்பும் குருதியும் தசையும் ஈரலும் நிணமும், குடர் மூளை சரிந்து
குழைந்திடுவார் - குடரும் மூளையும் சரிந்து தளர்ந்து வருந்துவார் சிலர்,
மழுவாள் சிலை தண்டு கடைத்தலை வேல் - மழுவும் வாளும் வில்லும்
தண்டும் கடைந்தெடுத்த வேலும், வலயம் கரவாளம் ஒடிந்திடுவார் -
வல்லயமும் கைவாளும் ஒடியப்பெற்றனர் சிலர், விழுவார் கரைவார்
உருள்வார் புரள்வார் - கீழே விழுவார்கள் மனங் கரைந்து வருந்துவர்
உருள்வார்கள் புரள்வார்கள் சிலர், விதியே சதியாக விளைத்தனை என்று
அழுவார் - விதியே! நீ எங்களுக்கு உட்பகையாய் இருந்து தீமை
விளைத்தாய் என்று அழுவார் சிலர், தகவு அல்லது செய்த நமக்கு
அழிவே என ஓடி அகன்றனரே - தகுதியல்லாத செயல்களைச் செய்த
நமக்கு அழிவே வரும் என்று ஓடிச் சென்றனர் அவ்வீரர்கள்.

     நிணம் - ஊனில் வடியும் நீர்; ஊனீர். படைகள் முழுவதும்
சிதைந்து வீரர்கள் பலரும் மடிந்து எஞ்சிய சேனைகளெல்லாம்
சிதறியோடின.
                                                    (12)

 
1202. இவ்வாறு வெருட் டிவதைத் தெனையுற்
   றினியே துசெயக் கடவேன் அடியேன்
அவ்வா றுரையென் னவியான் இனிநீ
   அகல்வான் மிசையென் னவுனைத் தனிவிட்(டு)