1199. |
அப்பசிதீர்ந்
தமைச்சரொடும் விரைவின் வந்தென்
அருகணைந்து மாமுனியே யடிய னேற்கின்(று)
இப்பசுவைத் தரல்வேண்டும் என்னக் கேட்க
இதற்குரியேன் யானல்லேன் என்ன லோடும்
அப்பசுவைக் கரிபரிதேர் சேனை யோடும்
அடங்கவளைந் தெறிபாசத் தாலே வீசத்
தப்பறவே பூண்டகயிற் றெதிர்போய் அந்தத்
தானையெலாம் மடிந்துவிழச் சாடிற் றவ்வான். |
(இ
- ள்.) அப் பசி தீர்ந்து அமைச்சரொடும் விரைவின் வந்து
என் அருகு அணைந்து - அம் மன்னன் அப் பசி தீரப்பெற்று அமைச்
சர்களோடும் விரைவில் என் அருகில் வந்து, மாமுனியே அடியனேற்கு
இன்று இப் பசுவைத் தரல் வேண்டும் என்னக் கேட்க - சிறந்த முனிவரே!
அடியேனுக்கு இன்று இப் பசுவைத் தருதல் வேண்டும் என்று கேட்க,
இதற்கு உரியேன் யான் அல்லேன் என்னலோடும் - இதனைக்
கொடுப்பதற்கு யான் உரியவன் அல்லேன் என்று கூறியவுடன், அப்
பசுவைக் கரி பரி தேர் சேனையோடும் அடங்க வளைந்து எறி
பாசத்தாலே வீச - அந்தப் பசுவை யானை குதிரை தேர் முதலிய
சேனைகளோடு வந்து வளைத்துக்கொண்டு பெரிய கயிற்றை அதன் மேல்
வீசியவுடன், தப்பு அறவே பூண்ட கயிற்று எதிர் போய் அந்தத் தானை
யெலாம் மடிந்து விழச் சாடிற்று அ ஆன் - தவறாமல் தன்மேல் வந்து
விழுந்து கயிற்று வழியாகவே சென்று அந்தச் சேனைகள் எல்லாம் மடிந்து
விழுமாறு கொன்றது அப் பசு.
'அப் பசுவை உங்கட்குக் கொடுப்பதற்கு நான் உரியேனல்லேன்;
அது தேவருலகத்துப் பசு' என்று நான்கூறினேன்; உடனே கவுசிகன் அப்
பசுவை வளைத்துப் பிடித்துக்கொள்ள எண்ணிக் கயிற்றாற் கட்ட
முயன்றனன். அஃது அவனுடைய சேனைகளையெல்லாங் கொன்று
இவர்கள் கயிற்றிலகப்படாமல் நின்றது.
(10)
|
சந்தக்
கலிநிலைத்துறை |
1200. |
ஆலா லமெழுந்
ததெனச் சினமுற்
றணியூ டுபுகுந் துதுகைத் திடவே
வேலா ளரும்வெங் கரிவித் தகரும்
வில்லா ளரும்வெம் பரிவீ ரர்களும்
காலான் மிதிபட் டவர்கோ டியர்கட்
கனலால் எரிபட் டவர்கோ டியர்நீள்
வாலா லடிபட் டவர்கோ டியர்வெண்
மருப்பால் வதையுண் டவர்கோ டியரே. |
(இ - ள்.) ஆலாலம் எழுந்தது எனச்
சினமுற்று - ஆலாலம்
என்னும் நஞ்சு கொதித்தெழுந்தாற்போலச் சினங்கொண்டு, அணியூடு
புகுந்து துகைத்திடவே - காமதேனு சேனை அணியினுள் புகுந்து காலால்
மிதித்துக்
|