(இ
- ள்.) ஒரு ஞான்று புலரி தனில் எழுந்து போகி - ஒருநாள்
பொழுது புலரும் விடியற்காலையில் எழுந்துபோய், உயர் வரைகள்
தோறும் உழன்று ஒன்றும் இன்றி - உயர்வான மலைகள்தோறும் வருந்தி
ஒரு விலங்கும் கிடைக்கப்பெறாமல், வரும் நாளில் அவ்விடத்து ஓர்
மானின் பின் போய் - வரும் நேரத்தில் அவ்விடத்தில் ஒரு மானைக்
கண்டு அதன் பின்னால் சென்று, வாய் புலர்ந்து நா உலர்ந்து காலும்
ஓய்ந்து - வாயும் நாவும் காயப்பெற்றுக் காலும் ஓய்ந்து தளர்ந்து, பெரு
நாணமும் பசியும் தவிப்பும் ஆகி - பெரிய வெட்கத்தோடு பசியும்
தவிப்பும் உடையவர்களாய், பின் பிடித்த விலங்கை விட்டுத் துன்பம்
எய்தி - பின் தொடர்ந்து வந்த விலங்கையும் விட்டுவிட்டுத் துன்பம்
அடைந்து, தரு நீழல், தன்னில் யான் இனிது வைகித் தவம் புரியும்
மலைச்சாரல் தன்னிற் சேர்ந்தான் - மரநிழலில் தங்கியிருந்து யான்
தவம் செய்துகொண்டிருந்த மலைச்சாரலை அடைந்தான்.
ஒருநாளில்
அக் கவுசிகன் விலங்கு ஒன்றும் கிடையாது வருந்தி
ஒரு மானைத் தொடர்ந்து வரும்போது நான் தவஞ்செய்திருந்த மர
நிழலையடைந்தான் என்றான் வசிட்டன்.
(8)
1198. |
யானவனைக்
கண்டிரங்கி நீயார் என்ன
அடிபணிந்து கௌசிகன்மன் னவன்யா னிந்தக்
கானகத்தின் மான்வேட்டை போந்து மற்றோர்
கடுமானின் பின்னோடிக் கால்கள் சோர்ந்து
தானையும்யா னும்பசியும் தவிப்பு மாகித்
தளர்ந்துனது சரணடைந்தேன் என்னக் காம
தேனுவைவா வென்றழைத்தியா னமுது நல்கித்
தீராத பசிதாகந் தீர்த்த பின்னர். |
(இ - ள்.) யான் அவனைக் கண்டு
இரங்கி நீ யார் என்ன -
யான் அம் மன்னனைக் கண்டு இரங்கி நீ யார் என்று கேட்க, அடி
பணிந்து கௌசிக மன்னன் - கௌசிக மன்னவன் என் அடிகளில்
வீழ்ந்து வணங்கி, யான் இந்தக் கானகத்தில் மான் வேட்டை போந்து -
யான் இந்தக் காட்டில் மான் வேட்டை ஆட வந்து, ஓர் கடு மானின்
பின் ஓடிக் கால்கள் சோர்ந்து - ஒரு கடுமையான மானின் பின்னால்
ஓடிக் கால்கள் தளர்ந்து, தானையும் யானும் பசியும் தவிப்பும் ஆகி -
சேனையும் யானும் பசியும் தவிப்பும் உடையவர்களாய், தளர்ந்து உனது
சரண் அடைந்தேன் என்ன - யான் மிகவும் வாடித் தளர்ந்து உன்
திருவடிகளை அடைந்தேன் என்று கூற, யான் காமதேனுவை வா என்று
அழைத்து அமுது நல்கி - யான் காமதேனு என்னும் பசுவை வர வழைத்து
அவர்களுக்கு உணவு கொடுத்து, தீராத பசி தாகந் தீர்த்த பின்னர் -
நீங்காத பசி தாகம் முதலியவற்றை நீக்கிய பிறகு;
காமதேனு என்னும் பசு தேவர் உலகத்தில் இருப்பது;
வேண்டுவார்க்கு வேண்டியவற்றை அளித்து உதவி செய்வது; அதனால்
வசிட்ட முனிவர் அதனை வரவழைத்து மன்னனுக்கு உணவு நல்கினார்.
வசிட்டர் ஆச்சிரமத்திலும் அப் பசு தங்கும்.
(9)
|