பக்கம் எண் :


589

கொல்வது எமக்கு எளிய செயல் அன்று என அடங்கி, மகவு ஆசை
அடைந்து உறவே - பிள்ளைகளின்மேல் வைத்த ஆசை
மிகுதிப்பட்டதனால், சுடுகின்ற மனத்துடன் ஊர் அணுகி - அனல்போல்
கொதிக்கின்ற மனத்துடன் ஊரை அடைந்து, துறவோர் வலியோர்
இறையோர் இல் எனா - துறவிகளே வலியவர்கள் மன்னர்கள் அங்ஙனம்
வலியவர் இலர் என்று, கொடு வெம் தொழில் நாடு துறந்து அகல -
கொடுமை மிக்க தொழில் புரிந்த தன் நாட்டைவிட்டு விலகி, குணபால்
அணுகித் தவம் உற்றனனே - கீழ்த்திசையை அடைந்து தவம் செய்தான்;

     என் யோக தண்டம் அக் கௌசிகன் படை யத்தனையும்
விழுங்கியவுடன் இனி இவனை வெல்லவியலாது என்று கருதிச்சென்று
துறவி களே மன்னரினும் வலியர் என்று துறந்து தவம் புரிந்தான்.
                                                    (16)

 
1206. இவனுற் றதவத் தைஅழிக் கநினைத்
   திமையோர்க் கிறைவிட் டதிலோத் தமையோ(டு)
அவனத் தவம்விட் டுநலத் திடைபுக்
   கழிபட் டுடனே யறிவுற் றவளைப்
புவனத் தின்மனித் தர்பிறப் பினில்நீ
   போவென்று சபித்தகல் தென்றிசை போய்ச்
சிவனைக் கருதித் தவமுற் றிடவே
   தீரா வரமீ சனளித் தனனே.

       (இ - ள்.) இவன் உற்ற தவத்தை அழிக்க நினைத்து - இவன்
மேற்கொண்ட தவத்தை அழிக்க நினைத்து, இமையோர்க்கு இறை விட்ட
திலோத்தமையோடு - தேவர்களுக்குத் தலைவனாகிய இந்திரன் அனுப்பிய
திலோத்தமை என்னும் பெண்ணுடன், அவன் அத் தவம் விட்டு நலத்திடை
புக்கு அழிபட்டு உடனே அறிவுற்று - அந்தக் கோசிகன் அந்தத்
தவத்தைக் கைவிட்டு அவள் இன்பத்தில் ஈடுபட்டு அதனால் தவம்
அழிந்து உடனே அறிவு வரப்பெற்று, அவளைப் புவனத்தின் மனித்தர்
பிறப்பினில் நீ போ என்று சபித்து அவளை இவ்வுலகத்தில் மனிதப்பிறவி
அடைவாய் என்று சபித்து, அகல் தென் திசை போய் - அகன்ற
தென்திசையை அடைந்து, சிவனை கருதித் தவம் உற்றிடவே தீரா வரம்
ஈசன் அறித்தனனே - சிவனை நினைத்துத் தவம் செய்தபோது நீங்காத
நல்ல வரத்தைச் சிவபெருமான் அளித்தார்.

     இந்திரன் இக் கௌசிகன் தவத்தைக் கெடுக்க நினைத்து திலோத்
தமையை யனுப்ப, அவளைக் கண்டு மயங்கித் தவத்தை விட்டு அவளோடு
கூடிப் பின் அவளைச் சபித்துப் பின்னும் சிவனை நோக்கித் தவஞ்செய்து
ஈசன் திருவருள் எய்தப்பெற்றானிவன்.
                                                    (17)

 
1207. அந்நா ளிலெனைத் திரிசங் கருகுற்
   றங்கத் தொடுவிண் புகல்வேண் டுமெனாச்
சொன்னான் முடியா தெனயான் மொழியத்
   துறவோர் பிறரால் உறுவேன் எனலும்