|
செவ்வழ லயிற்படைச்
செல்வ கேளெனா
வெவ்வழ லனையநீர் வெள்ளி கூறுவான். |
(இ
- ள்.) அ அழல் வளைந்திட அரசர் கோமகன் - அந்த
நெருப்பு வளைந்துகொண்டபோது மன்னர் மன்னனாகிய அரிச்சந்திரன்,
இ அழல் எவ் வழல் என்று கூறலும் - இந்த நெருப்பு எவ்வகையில் வந்த
நெருப்பு என்று கேட்டவுடன், செவ் வழல் அயிற் படைச் செல்வகேள்
எனா - சிவந்த அழல் போன்ற கூர்மையான படைகளையுடைய செல்வனே
கேட்பாயாக என்று, வெவ் வழல் அனைய நீர் வெள்ளி கூறுவான் -
கொடிய நெருப்புப்போன்ற தன்மையுடைய வெள்ளி என்பவன் கூறத்
தொடங்கினான்.
நீர்
- நீர்மை, தன்மை, குணம் : ஒருபொருட்சொற்கள். அயில் படை
- அயிலாகிய படை : இருபெயரொட்டுப் பண்புத்தொகை.
தீ
தம்மைச் சுற்றி வளைத்தபோது மன்னன் வெள்ளியை நோக்கி
இஃது எவ்வகையில் வந்த தீ என்று வினவினன். அவன் விடை கூறுவான்.
(141)
894. |
சண்டவெம்
பசியினா லழன்று தாவியே
அண்டகோ ளத்தினை அடர்ந்த செந்தழல்
மண்டலத் தரசர்தம் மரபி லோருயிர்
உண்டல தேகில தென்று ணர்த்தினான். |
(இ - ள்.) சண்ட வெம் பசியினால்
அழன்று தாவியே -
வேகமான கொடிய பசியினால் கொதித்துத் தாவி, அண்டகோளத்தினை
அடர்ந்த செந்தழல் - வானமண்டலத்தையும் நெருங்கிய செந்தழலானது,
மண்டலத்து அரசர்தம் மரபில் ஓர் உயிர் உண்டு அலது - இந்த
மண்ணுலகத்து மன்னருடைய மரபிற்பிறந்த ஒருவருடைய உயிரை
உண்டால் அல்லாமல், ஏகிலது என்று உணர்த்தினான் -
திரும்பிச்செல்லாது என்று கூறினான்.
சுக்கிரன் மன்னனை நோக்கி 'இத் தீ மன்னர்குலத்தில்
ஒருவரை
யுண்பதற்காக வந்த தீ; ஆதலால் ஒருவருயிர் உண்டுதான் ஒழியும்' என்று
கூறினான் என்பது.
(142)
|
அரிச்சந்திரன்
'தீயில் வீழ்ந்து இறப்பேன்' எனல் |
895. |
ஒருவரை யாருயி
ருண்டு போகில்யான்
ஒருவனே இறப்பனீ ருய்ந்து போமெனாத்
திருவையும் மகனையும் நோக்கிச் செங்கணீர்
வரவர வனலெதிர் மன்னன் ஏகினான். |
(இ
- ள்.) ஒருவரை ஆருயிர் உண்டு போகில் - ஒருவரைமட்டும்
இந்நெருப்பு உயிர் குடித்துப்போவதாய் இருந்தால், யான் ஒருவனே
இறப்பன் - யான் ஒருவன் மட்டுமே இறந்து உயிர்விடுவேன், நீர் உய்ந்து
போம் எனா - நீங்கள் தப்பிப் பிழைத்துப் போய்விடுங்கள் என்று, திருவையும் மகனையும்
|