நோக்கிச் செங்கண்
நீர் வர வர - திருமகளைப்போன்ற சந்திரமதியையும்
தேவதாசனையும் நோக்கிச் சிவந்த கண்களிலே நீர் சிந்தும்படி, அனல்
எதிர் மன்னன் ஏகினான் - நெருப்பின் எதிரிலே மன்னன் சென்றான்.
இறப்பன்
: தன்மை ஒருமை வினைமுற்று. திரு : உவமையாகுபெயர்.
கண் + நீர் = கண்ணீர் என்பது கணீர் எனத் தொகுத்தலாயிற்று. மன்னன்
இவ்வாறு கூறித் தீயெதிர் சென்றான்.
(143)
|
சத்தியகீர்த்தி
கூறுதல் |
896. |
புரவல னடிகளைப்
பூண்ட மைச்சனோர்
உரையிது கேட்டியா னொருவ னிற்கவே
அரசழி வதுநல னன்று நிற்றிநீ
விரைவொடு கனலிடை வீழ்வன் யானென்றான். |
(இ
- ள்.) புரவலன் அடிகளைப் பூண்டு அமைச்சன் -
அமைச்சனாகிய சத்தியகீர்த்தி மன்னனுடைய திருவடிகளைப்
பற்றிக்கொண்டு, ஓர் உரை இது கேட்டி - யான் கூறும் இவ்வுரை ஒன்றை
மட்டு கேட்பாயாக, யான் ஒருவன் நிற்கவே அரசு அழிவது நலன் அன்று
- யான் ஒருவன் இருக்கும்போது அரசன் இறப்பது நன்று அன்று, நீ நிற்றி
- நீ நிற்பாயாக, விரைவொடு கனலிடை வீழ்வன் யான் என்றான் -
விரைவில் யான் நெருப்பில் விழுவேன் என்று கூறினான்.
நிற்றி,
கேட்டி, என்பன முன்னிலையேவலொருமை வினைமுற்றுகள்.
நிற்றி - நிற்பாய். கேட்டி - கேட்பாய்.
(144)
|
அறுசீர்க்கழி
நெடிலடி ஆசிரியவிருத்தம் |
897. |
அன்னவை உரைக்க
அண்ண லவனைமார் பிறுகப் புல்லி
மன்னவர் தம்மை யன்றி மற்றவ ருயிரை யுண்ணா
தென்னவுங் கேட்டேன் யானீ இறக்கினும் இறக்க வேண்டும்
உன்உயிர் விடாம லென்ற னோருயிர் விடுத னன்றே. |
(இ - ள்.) அன்னவை உரைக்க -
அமைச்சன் அவ்வாறு
கூறியவுடன், அண்ணல் அவனை மார்பு இறுகப் புல்லி - மன்னன்
அவனை மார்பு இறுகும்படி தழுவிக்கொண்டு, மன்னவர் தம்மை அன்றி
மற்றவர் உயிரை உண்ணாது என்னவும் கேட்டேன் - மன்னருடைய
உயிரை அல்லாமல் மற்றவருடைய உயிரை உண்ணாது இந்த நெருப்பு
எனக் கேள்வியுற்றேன், நீ இறக்கினும் யான் இறக்கவேண்டும் - நீ
இறந்தாலும் பின்னர் யான் இறக்கவேண்டும், உன் உயிர் விடாமல் என்றன்
ஓர் உயிர் விடுதல் நன்றே - ஆதலால் நீ உன்னுடைய உயிரை
விடாமலிருக்க நான் என்னுயிரை விடுதல் நன்றாகும் (என்றான் மன்னன்.)
சத்தியகீர்த்தியைத் தழுவி மன்னன் கூறுவது இது.
இங்கு வரும்
தீயானது மன்னவருயிரை மட்டும் உண்ணும் என்று சுக்கிரன்
சொல்லக்கேட்டேன், நீ இறப்பினும் நானும் பின் இறக்க நேரிடும்
ஆதலால் நான் ஒருவன் இறப்பதே நன்று என்றான்.
(145)
|