898. |
இருவரும் இறந்தோ
மாகி லிவரையோர் பதியிற் சேர்க்க
ஒருதுணை யுண்டோ சொல்லாய் உறுபொரு ளுணர்ந்தோ
யென்னா
மறுமலர் நறுந்தார் மன்னன் மறுதலைத் துரைக்கு மெல்லைத்
திருவெழில் வடமீன் கற்பிற் றிருந்திழை செப்ப லுற்றாள். |
(இ
- ள்.) இருவரும் இறந்தோமாகில் - நாம் இருவரும்
இறந்துவிட்டால், இவரை ஓர் பதியில் சேர்க்க ஒரு துணை உண்டோ
சொல்லாய் உறு பொருள் உணர்ந்தோய் என்னா - இவர்களை ஓர்
ஊரிலே சேர்க்க ஒரு துணை உண்டோ உறுதிப்பொருள்களை அறிந்த
அமைச்சனே! நீ சொல்வாய் என்று, மரு மலர் நறுந் தார் மன்னன்
மறுதலைத்து உரைக்கும் எல்லை - மணம் வீசும் மலர்மாலை அணிந்த
மன்னன் மறுத்துக்கூறும் அமையத்தில், திரு எழில் வடமீன் கற்பின்
திருந்திழை செப்பலுற்றாள் - திருமகளைப் போன்ற அழகினையும் வட
மீனாகிய அருந்ததியைப் போன்ற கற்பினையும் உடைய சந்திரமதி
சொல்லத் தொடங்கினாள்.
'இருவரும்
இறந்துவிட்டால் இவர்கள் நிலைமை என்னாகும்?' என்று
கூறி மறுத்தான் மன்னன்; அவ்வமையம் சந்திரமதி கூறத் தொடங்கினாள்.
(146)
|
சந்திரமதி
தீயில் விழச் செல்லுதல் |
899. |
மாந்தரா
லிறத்தல் வாழ்தன் மாதரார்க் கென்று மேனாள்
ஆய்ந்தநூ லறிந்தோர் கூறக் கேட்டன னாத லாலே
வேந்தனை விடாது காத்தி அண்ணனீ யானிவ் வெந்தீப்
பாய்ந்துயிர் விடுவே னென்னாப் பைந்தொடி முந்திச் சென்றாள் |
(இ - ள்.) மாந்தரால் இறத்தல்
மாதரார்க்கு வாழ்தல் என்று
ஆய்ந்த நூல அறிந்தோர் கூறக் கேட்டனன் - தம் கணவர்க்காக உயிர்
விடுதல் மாதரார்க்குப் புகழோடு வாழ்தல் ஆகும் என்று நூல்களை
ஆராய்ந்தவர் கூறக் கேட்டிருக்கின்றேன், ஆதலாலே அண்ணல் நீ
வேந்தனை விடாது காத்தி - ஆதலால் அண்ணலே! நீ மன்னனை விடாது
காப்பாயாக, யான் இவ் வெந் தீப் பாய்ந்து உயிர் விடுவன் என்னா
பைந்தொடி முந்திச் சென்றாள் - யான் இந்தக் கொடிய நெருப்பிலே
பாய்ந்து உயிர் விடுவேன் என்று கூறிச் சந்திரமதி முன்னால் சென்றாள்.
புரந்தார்கண் நீர்மல்கச் சாதல்போல, கணவற்காக
மாதர் உயிர்
விடுதல் புகழ் தரும் ஆதலின் 'மாதரார்க்கு வாழ்தல் மாந்தரால் இறத்தல்'
என்றார்.
மாந்தரால் என்றது ஆடவரால் என்ற பொருளைத் தந்தது.
ஆடவர்க்காக என்று கொள்க. அண்ணல் : அண்மைவிளி; அமைச்சனை
நோக்கிக் கூறியது.
(147)
900. |
அன்னைதா
னேக மைந்த னலறிச்சென் றடிவீழ்ந் தன்னாய்
என்னைநீர் பயந்தீ ருங்க ளிடுக்கணுக் குதவ வன்றோ |
|