(இ
- ள்.) மதுரம் மென் மொழியாள் கற்பு - இனிய மென்மையான
மொழிகளைப் பேசும் சந்திரமதியின் கற்பு என்கின்ற, வளர் நெடு
வடவைத் தீயின் முதிர் தழல் அதுதான் என்னைச் சுடும் எனா - வளர்ந்த
நெடிய வடவை நெருப்பைக் காட்டிலும் முதிர்ந்த நெருப்பானது என்னைச்
சுடும் என்று சொல்லி, முழங்கு செந்தீ அதிர் குரல் ஆர்ப்பு மாறி -
முழங்குகின்ற செந்நெருப்புத் தான் ஒலிக்கின்ற குரலின் ஆரவாரம்நீங்கி,
அடங்கி நா ஒடுங்கி - அடங்கி நாக்கு ஒடுங்கி, காலைக் கதிரவன் வரவு
கண்ட இருள் எனக் கழிந்தது - காலையில் தோன்றும் சூரியனுடைய
வருகையைக் கண்ட இருளைப்போல நீங்கியது (அன்று, ஏ : அசைநிலை.)
வடவைத்
தீயின் முதிர் தழல் - வடவைத்தீயினும் கொடிய தீ. எனா
- என்று நினைத்து; நா என்றது, தீக் கொழுந்தினைக் குறித்தது.
கற்புக்கனலுக்குக் காட்டுக்கனல் அஞ்யோடிற்று. இஃது உவமை யணி.
(152)
|
காசி
சேர்தல் |
905. |
மண்டழ றணிந்து
மூங்கில் வனமெலாம் வாவி யாகி
முண்டகம் குமுத நீல முளரிக ணிறையப் பூப்பக்
கண்டகம் குளிர்ந்து கற்பிற் கரசியைப் புகழ்ந்து போற்றி
வண்டலின் மணிகொ ழிக்கும் வாரண வாசி சேர்ந்தார். |
(இ - ள்.) மண்டு அழல் தணிந்து
மூங்கில் வனமெலாம்
வாவியாகி - பெருகிய நெருப்புத் தணிந்து மூங்கிற்காடெல்லாம் குளமாகி,
முண்டகம் குமுதம் நீலம் முளரிகள் நிறையப் பூப்பக் கண்டு -
வெண்டாமரை குமுதம் நீலம் செந்தாமரை மலர்கள் நிறையப்
பூத்திருத்தலைக் கண்டு, அகம் குளிர்ந்து கற்பிற்கரசியை புகழ்ந்து போற்றி
- மனம் குளிர்ந்து கற்புக்கரசியாகிய சந்திரமதியைப் புகழ்ந்து போற்றுதல்
செய்து வண்டலின் மணி கொழிக்கும் வாரண வாசி சேர்ந்தார் - சேற்று
நிலமெல்லாம் முத்துக்களைக் கொழிக்கின்ற வாரணவாசி என்னும்
நகரத்தைச் சேர்ந்தார்.
வாரணவாசி, வாரணாசி என்பன காசிநகரத்தின் மறுபெயர்கள்.
மூங்கிற்காடனைத்தும் பொய்கையாயின; தாமரை அல்லி முதலிய பூக்கள்
பூத்தன; கண்டு போற்றியவர், மன்னன், அமைச்சன், சுக்கிரன் இவர்கள்
எனக் கொள்க.
(153)
906. |
வாரண வாசி
நண்ணி வண்டுறை யதனின் மேவி
ஆரண நெறிநீ ராடி அந்நதி அகன்று போகிப்
பூரணக் கொங்கை மாதும் புதல்வனும் பின்னே போகக்
காரணத் தமைச்ச னோடும் காசிநன் னாட்டைச் சேர்ந்தான். |
(இ
- ள்.) வாரண வாசி நண்ணி வண்துறை அதனின் மேவி -
வாரணவாசி என்னும் நகரத்தையடைந்து வளமான நீர்த்துறையை யடைந்து,
ஆரண நெறி நீராடி - மறைநூல் முறைப்படி நீராடி, அந் நதி அகன்று
|