பக்கம் எண் :


440

போகி - அந்த நதியை விட்டு அகன்று சென்று, பூரணம் கொங்கை
மாதும் புதல்வனும் பின்னே போக - வளர்ந்த கொங்கைகளை யுடைய
சந்திரமதியும் மைந்தனாகிய தேவதாசனும் பின்னே செல்ல, காரணத்து
அமைச்சனோடும் காசி நன்னாட்டைச் சேர்ந்தான் - மன்னனைக் காத்தல்
காரணமாக வந்த அமைச்சனோடும் காசிநாட்டை மன்னன் அடைந்தான்.

     காசியிற் சென்று கங்கை நீராடி அதன்பின் அரிச்சந்திரன் தன்
மனைவி, மைந்தன், அமைச்சன் இவர்களுடன் காசிநகரத்துட்புகுந்தான்.
'ஆரண நெறி நன்னீராடி' வேதத்திற் கூறிய முறைப்படி இது மனைவியின்
கரம்பற்றி இன்ன முறையாக நீராடவேண்டும் என்று ஆடவாக்கும்
பெண்களுக்கும் வகுத்துக் கூறிய முறையை விளக்கியது.
                                                   (154)

              நகர் நீங்கிய காண்டம் முற்றிற்று.