[அரிச்சந்திரன்
காசியை யடைதலும், ஆங்கு நிகழுஞ்
செயல்களும் இதிற் கூறப்படும்.]
|
அறுசீர்க்கழி
நெடிலடி ஆசிரிய விருத்தம் |
907. |
மாவெலா மரிகள்
பாட மகிழ்ந்துநல் வாச மன்னும்
பூவெலாம் செழுந்தே னல்கப் பூவையும் கிளியும் ஓதும்
பாவெலாம் உருகக் கேட்டுப் பலகனிப் பரிசில் நல்கிக்
காவெலாம் தலைஅ சைக்கும் காசிநாட் டியல்பு சொல்வாம். |
(இ - ள்.) மா எலாம் அரிகள்
பாட - வயல்களில் எல்லாம்
வண்டுகள் பாடவும், மகிழ்ந்து நல் வாசம் மன்னும் பூவெலாம் செழுந்தேன்
நல்க - மகிழ்ந்து நல்ல வாசனை பொருந்திய பூக்களெல்லாம் செழுமையான
தேனைக் கொடுக்கவும், பூவையும் கிளியும் ஓதும் பா எலாம் உருகக்
கேட்டு - நாகணவாய்ப் புட்களும் கிளிகளும் பாடுகின்ற
பாக்களையெல்லாம் மனம் உருகக் கேட்டு, பல கனி பரிசில் நல்கி - பல
பழங்களாகிய பரிசிலைக் கொடுத்து, கா எலாம் தலை அசைக்கும் -
சோலைகள் எல்லாம் தலை அசைக்கின்ற, காசி நாட்டு இயல்பு சொல்வாம்
- காசிநாட்டின் இயல்பைச் சொல்லுவாம்.
வண்டுகள் பாடப் பூக்கள் தேன் நல்குவதாகவும்,
பூவையும் கிளியும்
பாடச் சோலைகள் கனி நல்கித் தலை அசைப்பதாகவும் குறித்தலால் இது
தற்குறிப்பேற்ற வணியாகும்.
(1)
908. |
தேவியும்
கோவும் எய்தத் திகழ்செழுங் கமலப் போதும்
காலியும் குமுதப் போதும் காமர்செங் கிடையும் தண்ணீர்
வாவியும் காட்ட மாதர் வதனமும் காட்ட வண்டாம்
பாவியும் ஈதே தென்று பரதவித் துழலு மன்னோ. |
(இ
- ள்.) தேவியும் கோவும் எய்த - சந்திரமதியாகிய தேவியும்
அரிச்சந்திரனும் சென்றபோது, திகழ் செழும் கமலப் போதும் -
விளங்குகின்ற செழுமையான தாமரை மலரையும், காவியும் குமுதப் போதும்
காமர் செங்கிடையும் - நீலமலர்களையும் அல்லிமலரையும் அழகிய சிவந்த
நெட்டியையும், தண்ணீர் வாவியும் காட்ட - நீர் நிறைந்த குளமும் காட்ட,
மாதர் வதனமும் காட்ட - பெண்களின் முகங்களையும்காட்ட, வண்டாம்
பாவியும் ஈது ஏது என்று பரதவித்து உழலும் மன்னோ - வண்டு என்னும்
பாவியும் இவற்றில் எவை உண்மையானவை என்று வருந்திப் பரதவித்துத் திரிகின்றன.
|