பெண்களின்
முகமும் கையும் காலும் தாமரைக்கு உவமை. வாய்.
அல்லி மலருக்கும், நீலமலர் கண்களுக்கும் உவமை. நீராடும் பெண்களின்
முகம் தாமரை போலவும், வாய் அல்லி போலவும், கண்கள் நீலமலர்
போலவும் இதழ் கிடை போலவும் இருத்தலால் வண்டுகள் இவைகளைக்
குளத்தில் தோன்றிய தாமரை முதலியவையாகக் கருதி மயங்கி யலைந்தன
என்பது.
(2)
909. |
வயலெலாம்
செந்நெல் செந்நென் மருங்கெலாம் கயல்கள்
வாவும்
கயலெலாம் கலவை வாசம் காவெலாம் புயல்கள் காவிற்
புயலெலாம் புகையே அந்தப் புகைஎலாம் பூழில் பூழில்
அயலெலாம் ஆர மாரத் தருகெலாம் தேவ தாரம். |
(இ - ள்.) வயலெலாம் செந்நெல்
- வயல்களிலெல்லாம்
செந்நெற் பயிர்கள் உள்ளன, செந்நெல் மருங்கெலாம் கயல்கள் - செந்நெற்
பயிர்களின் பக்கங்களிலெல்லாம் கயல் மீன்கள், வாவும் கயலெலாம்
கலவை வாசம் தாவிச் செல்லுகின்ற கயல் மீன்களின்மேலெல்லாம் சந்தனக்
கலவை வாசம் வீசுகின்றது. காவெலாம் புயல்கள் - சோலைகளிலெல்லாம்
மேகங்கள், காவிற் புயலெலாம் புகையே - சோலையிலுள்ள
மேகங்களின்மேல் ஓமப் புகை படிந்துள்ளது, அந்தப் புகையெலாம் பூழில்
- அந்தப் புகைபடிந்த இடமெல்லாம் அகில் மரங்கள், பூழில் அயலெலாம்
ஆரம் - அகில் மரங்களின் பக்கமெல்லாம் சந்தனமரங்கள், ஆர்த்து
அருகெலாம் தேவதாரம் - சந்தனமரங்களின் பக்கமெல்ாம் தேவதாரு
மரங்கள் இருந்தன.
இருந்தன எனச் சொல் வருவிக்கப்பட்டது, பயனிலை
பாட்டில்
இல்லையாதலால், வயலிற் செந்நெற்பயிரும் கயலும் இருந்தன. கயல் மீன்
புலால் நாற்றமின்றிக் கலவைச் சந்தனவாசம் பொருந்தியிருந்தது என்றார்.
அதற்குக் காரணம் ஆற்றில் மங்கையர் நீராடியதால் அவர்கள்
கொங்கைகளிற் பூசிய வாசனைச்சாந்தம் நீரிற்கலந்து மாற்றியதாக
உய்த்துணர்ந்து கொள்க. "மாதர் கனதனக் கலவை" எனப் பின்பரும்
கவியின் கருத்தும் காண்க.
(3)
910. |
நுரைமண நாறும்
சீத நுண்டுளித் திரள்கள் சிந்தும்
திரைமண நாறு மீனத் திரண்மண நாறும் செந்தா
மரைமண நாறும் வெள்ளை வளைமண நாறும் வாவிக்
கரைமண நாறும் மாதர் கனதனக் கலவை அம்மா. |
(இ
- ள்.) மாதர் கனதனக் கலவை - பெண்களின் கொங்கைகளில்
அணிந்துள்ள கலவைச் சாந்து கரைதலால், நுரை மணம் நாறும் - வாவிநீர்
நுரையெலாம் மணம் வீசும், சீதம் நுண் துளித் திரள்கள் சிந்தும் திரை
மணம் நாறும் - குளிர்ந்த நுண்ணிய நீர்த்துளிகளைச் சிந்துகின்ற
அலைகளெல்லாம் மணம் நாறும், மீனத் திரள் மணம் நாறும் - மீன்
கூட்டமெல்லாம் மணம் வீசும், செந்தாமரை மணம் நாறும் - செந்தாமரை
மலர்களெல்லாம் மணம் வீசும், வெள்ளை வளை மணம் நாறும் -
வெண்மையான சங்குகள் மணம் வீசும், வாவிக் கரை மணம் நாறும் -
குளத்தின் கரையிலும் மணம் வீசும்.
|