அறிந்து, உள நாள்
கைம்மாறு அளித்திடச் செல்வார் போல - செல்வம்
உள்ள நாளில் கைம்மாறாகத் திருப்பி அளிக்கச் செல்கின்றவரைப்போல,
வயல் வளம் சுரக்க மேனாள் மழை வளஞ் சுரந்த - வயல்களில் விளையும்
வளம் சுரக்கும்படி முன்னாளில் மழை வளம் சுரந்து பெய்து கொடுத்த, சீர்
சால் புயல் வளர் விசும்பில் - சிறப்பு மிகுந்த மேகங்கள் வளர்கின்ற
வானத்தில், செந்நெல் போய்ப் புக வளர்ந்த - செந்நெற் பயிரானது போய்ப்
புகும்படி வளர்ந்தன.
மேகம்
மழை கொடுத்ததனால் நெற்பயிர் தன் வளத்தைத் திருப்பிக்
கொடுக்க வானத்தைச் சென்று அடைந்தது என்பது கருத்து. புலவோர்
என்பது பொதுவாக அறிஞர் என்ற பொருளில் வந்தது. இது
உயர்வுநவிற்சியணி.
(9)
916. |
இத்தகை யாய
நன்னாட் டெல்லைகண் டொல்லை யேகி
மைத்தழை கபாட வாயின் மணிநிழல் வந்து நண்ணிக்
கொத்தலர் குழலி யோடும் கோளொடும் குமர னோடும்
மெய்த்திற லமைச்ச ரொடும் வித்தகன் காசி புக்கான். |
(இ - ள்.) இத்தகையாய நன்னாட்டு
எல்லை கண்டு ஒல்லை
ஏகி - இத்தகைய நல்ல நாட்டின் வளமெல்லாம் கண்டு விரைவாகச்
சென்று, மை தழை கபாட வாயில் மணி நிழல் வந்து நண்ணி - மேகங்கள்
வந்து படிகின்ற கதவுகளையுடைய கோட்டைவாயிலின் அழகிய நிழலிலே
தங்கி, கொத்து அலர் குழலியோடும் கோளொடும் குமரனோடும் -
கொத்தாகிய மலர்களையணிந்த கூந்தலையுடைய மனைவியோடும்
சுக்கிரனோடும் மைந்தனாகிய தேவதாசனுடனும், மெய்த்திறல்
அமைச்சனோடும் - உண்மைத்தன்மையுடைய அமைச்சனுடனும், வித்தகன்
காசி புக்கான் - வல்லமையுடைய மன்னன் காசிமாநகரத்தினுள் புகுந்தான்.
இவ்வாறு வளம் பொருந்திய காசிநாட்டெல்லையைக்
கண்டு
அரிச்சந்திரன் தன் மனைவி மைந்தனோடும் அமைச்சனோடும்
சுக்கிரனோடுங் கூடிக் காசிக்குட்புகுந்தான் என்பது.
(10)
|
காசி
நகர் காண்டல் |
917. |
ஆரண
சாலை கோடி ஆவண வீதி கோடி
தோரண வாயில் கோடி சுடர்மணி மாடம் கோடி
பூரண கும்ப மின்னிப் பொலியுமண் டபங்கள் கோடி
வாரண பந்தி கோடி வயப்பரி பந்தி கோடி. |
(இ
- ள்.) ஆரண சாலை கோடி - மறை ஓதுவார் வாழும்
இடங்கள் பலகோடி, ஆவண வீதி கோடி - கடைத்தெருவுகள் பல கோடி,
தோரண வாயில் கோடி - தோரணங்கள் கட்டிய வீட்டு வாயில் பல
கோடி, சுடர் மணி மாடம் கோடி - ஒளிவீசும் மணிகள் பதித்த
மாடமாளிகைகள் பல கோடி, பூரண கும்பம் மின்னிப் பொலியும்
மண்டபங்கள் கோடி - நிறைகுடங்கள்
|