வைத்து அழகுபெற விளங்குகின்ற
மண்டபங்கள் பல கோடி, வாரண
பந்தி கோடி - யானை கட்டும் இடங்கள் பல கோடி, வயப் பரி பந்தி
கோடி - வெற்றியையுடைய குதிரை வரிசைகள் பல கோடி உள்ளன.
உள்ளன
என்னுஞ் சொல் வருவித்து முடிக்கப்பட்டது,
பயனிலையின்றி இக்கவிநிற்றலால், அக் காசிமாநகரத்தில் எண்ணிறந்த
ஆரண சாலை முதலியவை இருந்தன என்பது. கோடி என்பது எண்ணைக்
குறித்ததன்று; எண்ணிறந்ததைக் காட்டவந்த சொல் எனக் கொள்க.
(11)
918. |
ஆடு மங்கைய
ரனந்த ராடுவா ராடல் காண
ஓடுமங் கைய ரனந்த ருலவுமங் கைய ரனந்தர்
பாடுமங் கைய ரனந்தர் பயிறரு வீதி எல்லாம்
வாடுமங் கையும் அயோத்த மன்னனும் கண்டு போனார். |
(இ - ள்.) ஆடும் மங்கையர் அனந்தர்
ஆடுவார் - நடனம்
ஆடும் பெண்கள் மிகப் பலர் ஆடுவார்கள், ஆடல் காண ஓடும்
மங்கையர் அனந்தர் - நடனத்தைக் காண ஓடும் மங்கையர் பலர்,
உலவும்மங்கையர் அனந்தர் - வீதிகளிலே போக்கு வரவுடைய பெண்கள்
அளவில்லாதவர், பாடும் மங்கையர் அனந்தர் - இசை பாடும் மங்கையர்
மிகப் பலர், பயில் தரும் வீதி யெல்லாம் - பழகி உலாவுகின்ற வீதிகளை
யெல்லாம், வாடும் மங்கையும் அயோத்தி மன்னனும் கண்டு போனார் -
வாடி வருந்துகின்ற சந்திரமதி என்னும் மங்கையும் அயோத்தி மன்னனாகிய
அரிச்சந்திரனும் கண்டு சென்றார்கள்.
அந்நகர மங்கையரிற் சிலர் ஆடுவாரும், அவ்வாடலைக்
காண ஓடு
வாரும் உலவுவாரும் பாடுவாரும் ஆக மறுகிற் பயின்றனர். அவரைக்
கண்டு சென்றனர் என்க.
(12)
919. |
தொலைவிலா
முதல்வ னார்க்குஞ் சுக்கிரன் றனக்கு மாய
வலைவின்மா நகரி புக்கா ரரிவைய ரளகக் காடும்
கலைவிழிக் கடலும் இன்பக் கடிதட வரவும் பார
முலைஎனும் மலையும் வந்து முடுகின மறுகு தோறும். |
(இ
- ள்.) தொலைவு இலா முதல்வனார்க்கும் சுக்கிரன் தனக்கும்
- அழிதல் இல்லாத புகழுடைய அரிச்சந்திரனுக்கும் வெள்ளி என்னும்
சுக்கிரனுக்கும், மாய அலைவின் மா நகரி புக்கார் - மாயத்தன்மையோடு
கூடிய அலைச்சலைத் தருகின்ற பெரிய நகரத்திற் புகுந்தனர், அரிவையர்
அளகக் காடும் - அப்பொழுது பெண்களின் கூந்தல் என்னும் காடும்,
கலை விழிக் கடலும் - கலைமான் போன்ற கண்கள் என்னும் கடலும்,
இன்பக் கடிதட அரவும் - இன்பத்தைத் தருகின்ற அல்குல் என்னும்
பாம்பும், பார முலை எனும் மலையும் வந்து முடுகின மறுகு தோறும் -
சுமையான முலை என்னும் மலையும் வந்து அவர்களை நெருக்கி விரைவு
படுத்தின வீதிகளில் எல்லாம்.
கடல்,
காடு, மலை முதலியன வந்து அரிச்சந்திரனையும்
வெள்ளியையும் தடைபடுத்தின என்பது கருத்து. மன்னனைக் கூறவே,
சந்திரமதி முதலானவரும் அடங்கினர்.
|