|
மன்னன்
கடன் கொடுக்க வகையறியாது திகைத்தல் |
924. |
அதிரப்பெரு
கரவத்தொடு மழல்கட்புகர் பலகால் முதிரச்சில சுடுகட்டுரை மொழியப்பொரு டருமச்
சதுரெப்படி யெனவெய்த்துட றளரத்துணை விழிமுத் துதிரச்சிறி ரெதிருத்தா முரையாம
லிருந்தான். |
(இ
- ள்.) புகர் அதிரப் பெருகு அரவத்தொடும் அழல் கண்
பலகால் - வெள்ளி என்னும் அந்தணன் அதிர்ச்சியுடன் பேரொளி செய்து
நெருப்புப்போல் சிவந்த கண்களுடன் பல முறை, முதிரச் சில சுடு கட்டுரை
மொழிய - முதிரும்படி சில சுடுகின்ற கட்டுரைகளை மொழிந்தபோது,
பொருள் தரும் அச் சதுர் எப்படி என எய்த்து - மன்னன் தான்
முனிவனுக்குப் பொருள் கொடுக்கும் வழி எப்படி என இளைத்து, உடல்
தளரத் துணைவிழி முத்து உதிர - உடல் தளர்ச்சி யடைய இரண்டு
கண்களிலும் முத்துப்போல் கண் நீர் சிந்த, சிறிது எதிர் உத்தரம்
உரையாமல் இருந்தான் - சிறிதுநேரம் எதிர் விடை கூறாமல் இருந்தான்.
சுக்கிரன்
பல சுடுசொற் கூறினன். மன்னன் கடன் தீர்க்கும் வழி
யறியாது மயங்கி விடை கூறாமல் வருந்தினன். புகர் - சுக்கிரன்; சதுர் -
தந்திரம், சூழ்ச்சி, வழி, வகை என்ற பொருளை யுணர்த்தும்; இது
வடமொழி.
(18)
|
சந்திரமதி
வினவுதல் |
925. |
மொழியும்பழி
உணராமுகிழ் முலையாண்முதிர் கடனீர்
பொழியும்கயல் விழியாண்முனி பொருணல்குத றுணியா
தெழுகின்றதொர் பசியானலி வெருகஞ்சி வெலிபோல்
அழுகின்றதெ னரசேயென அவனுஞ்சில மொழிவான். |
(இ - ள்.) முகிழ் முலையாள் மொழியும்
பழி உணரா - அரும்பு
போன்ற தனங்களை உடைய சந்திரமதியும் வெள்ளி என்பவன் கூறிய பழி
மொழிகளைக் கேட்டு, முதிர் கடல்நீர் பொழியும் கயல்விழியாள் - முதிர்ந்த
பெரிய கடல் நீரைப் போன்று நீர் சிந்துகின்ற கெண்டை மீன் போன்ற
விழியுடையவளாய், முனி பொருள் நல்குதல் துணியாது - முனிவருக்குப்
பொருள் தரத் துணியாமல், எழுகின்றது ஓர் பசியால் நலி வெருகு அஞ்சிய
எலி போல் - மேல் எழுகின்ற பசியினால் வருந்துகின்ற பூனைக்கு
அஞ்சுகின்ற எலியைப் போல, அழுகின்றது என அரசே என - அரசே! நீ
அழுகின்றதற்குக் காரணம் என்ன என்று கேட்க, அவனும் சில
மொழிவான் - அம் மன்னவனும் சில மொழிகளைக் கூறலுற்றான்.
சந்திரமதி தன் கணவனை நோக்கி, 'முனிவனுக்குப்
பொருள் தரத்
துணியாமல் அழுவது என்ன காரணம்?' என்றாள். அப்போது அவன்
கூறுகின்றான் என்க.
(19)
|