|
அரசன்
தன் மனைவியையும் மைந்தனையும்
தெருவில் விலை கூறுதல் |
930. |
மெள்ளச்செல
நாணம்செல விரையச்செல வாய்மை
தள்ளப்புதல் வனையும்மயி றனையும்முன் நடத்தி
உள்ளத்துய ரறிவாகிய உரனாலுகு விழிநீர்
வெள்ளத்தினை அடையாவிறை விலைகூறி நடந்தான். |
(இ
- ள்.) மெள்ளச் செல நாணம் செல - மெதுவாகச் செல்லுமாறு
வெட்கம் மனத்துட் செல்லவும், விரையச் செல வாய்மை தள்ள - விரைந்து
செல்லுமாறு வாய்மை தள்ளவும், புதல்வனையும் மயில் தன்னையும் முன்
நடத்தி - அதனால் மகனையும் மயில் போன்ற மனைவியையும் முன்னால்
நடத்திக்கொண்டு, உள்ளத்து உயர் அறிவாகிய உரனால் - உள்ளத்தில்
உண்டாகிய உயர்ந்த அறிவு என்னும் வலிமையால், உகும் விழி நீர்
வெள்ளத்தினை அடையா - சிந்துகின்ற கண்ணீர் வெள்ளத்தை அடைத்து,
இறை விலை கூறி நடந்தான் - அரசன் விலை கூறிக்கொண்டு நடந்து
சென்றான்.
அடையா
: செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். அடைத்து
என்பது பொருள். நாணம் மனத்துள் எழுந்தது. விரைவாகச் செல்ல
மனமில்லாமல் மெதுவாக நடந்தான், வாய்மை தவறுமே என்ற அச்சம்
எழுந்தது; விரைய நடந்தான். இவ்வாறு மெதுவாகவும் விரைவாகவும் நடந்து
விலை கூறினான் என்பது.
(24)
931. |
தாலத்தற
முணராதுயிர் தளரும்படி பலசெய்
மேலைப்பழ வினைபற்றிட விற்கின்றனன் வினையேன்
வாலைச்சிறு பருவத்தெனன் மரபிற்புதல் வனையும்
நீலக்கயல் விழியாளையும் நிதிஉள்ளவர் கொண்மின். |
(இ - ள்.) தாலத்து அறம் உணராது
- இந்த மாநிலத்து
அறத்தை உணராமல், உயிர் தளரும்படி செய் - மற்ற உயிர்கள் தளரும்படி
பலவாறாகச் செய்த, மேலைப் பழவினை பற்றிட - முன்னைப் பழவினை
வந்து தொடர்ந்ததனால், வினையென் - பாவியாகிய நான், வாலைச் சிறு
பருவத்து என் நன்மரபிற் புதல்வனையும் - இளஞ் சிறு பருவத்தையுடைய
என் நல்மரபிற்பிறந்த மைந்தனையும், நீலக் கயல் விழியாளையும் -
நீலநிறமான கயல் மீன் போன்ற கண்களையுடைய என் மனைவியையும்,
விற்கின்றனன் - விற்கின்றேன், நிதி உள்ளவர் கொண்மின் - செல்வம்
உடையவர் விலைகொடுத்துப் பெற்றுக்கொள்ளுங்கள்.
தலம் - இடம். தாலம் என நீண்டது. பிறவுயிர்
வருந்துமாறு தீவினை
செய்தவர் மறுபிறப்பில் துன்புறுவர் என்பது இங்குக் கூறப்பட்டது. 'நான்
முற்பிறப்பிற் செய்த தீவினையால் என் மைந்தனையும் மனைவியையும்
விற்கும்படி நேர்ந்தது. இவர்கள் தீயவரல்லர்; தீயவரென்று இவர்களை
விற்கிறேன் என்று நினையாதீர்' என்பது குறிப்பு.
(25)
|