(இ
- ள்.) தவருக்கு அலது - தவமுனிவருக்கு அல்லாமல்,
அயிராவதம் எனும் நீள் கர சைலத்தவருக்கு அலது - அயிராவதம்
என்னும் நீண்ட கைம்மலையாகிய யானையையுடைய இந்திரனுக்கு
அல்லது, அளகாபுரிக்கு அரசுக்கு அலது - அளகாபுரி என்னும்
பட்டணத்தை ஆளும் குபேரனுக்கு அல்லது, அலை சேர் உவரிக் கடல்
புடை சூழ் - அலைகளையுடைய உவர்க்கடலால் சூழப்பெற்ற, வியன்
உலகத்திடை உறுவார் - பரந்த இவ்வுலகத்தில் தங்கியிருப்பவர், எவருக்கு
எளிது இவருக்கு உறு விலை நல்குவது என்பார் - இவருக்குரிய விலை
கொடுப்பதற்கு எவருக்கு எளிதாகும் என்று கூறுவார்.
சிலர்
இவர்களை மனிதர்களில் எவர் வாங்கமுடியும்? முனிவர்,
இந்திரன், குபேரன் இவர்களில் ஒருவர் வந்து வாங்கினால் வாங்கலாம்
என்றும் பேசினர் என்பது.
(28)
|
மறையோனொருவன்
தெருவில் வருதல் |
935. |
மண்மின்னென
வருமென்மனை வியையும்மக னையும்நீர்
கொண்மின்னென விலைகூறிய கோமானுரை கேளா
விண்மின்னென வலையும்புரி வெண்ணூலணி மார்பன்
கண்முன்னொரு மறையோனதி களவோடெதிர் வந்தான். |
(இ - ள்.) மண் மின் என வரும்
என் மனைவியையும் - பூமகள்
போல வருகின்ற என் மனைவியையும், மகனையும் - என் மைந்தனையும்,
நீர் கொண்மின் என விலை கூறிய கோமான் உரை கேளா - நீர்
விலைக்குப் பெற்றுக்கொள்வீராக என்று விலை கூறிக்கொண்டு வந்த
மன்னன் உரையைக் கேட்டு, விண் மின் என அலையும் புரி வெண் நூல்
அணி மார்பன் - விண்ணிற்றோன்றும் மின்னலைப்போல அசைகின்ற
முறுக்கப்பட்ட வெண்மையான பூணூலை அணிந்த மார்பினை யுடையவன்,
ஒரு மறையோன் கண் முன் அதி களவோடு எதிர் வந்தான் - ஒரு
மறையவன் கண்ணுக்கு முன்னால் மிகுந்த களவு எண்ணத்தோடு எதிரிலே
வந்தான்.
மண்மின் என்பது மண்ணாகிய பெண் என்ற பொருளைத்
தந்தது.
பூமிதேவி என்பது, பூமகள் என்றது பூமிதேவியைக் குறித்ததாகக் கொள்க.
மண்ணிற்றோன்றிய மின்னலைப்போல எனவும் பொருள் கொள்ளலாம்.
கேளா - கேட்டு : செய்யா என்ற வாய்பாட்டு வினையெச்சம். களவோடு
என்றது, மெய்யான மறையவனல்லன்; வஞ்சக வேடத்துடன் வந்த
மறையவன் என்பதை யுணர்த்தியது. தீக்கடவுள் தான் மறையவனாக
வந்தான் எனத் தெரிகிறது.
(29)
|
மறையோனும்
மன்னனும் உரையாடல் |
936. |
என்சொல்லினை
முன்சொன்னவை இன்னம்பக ரெனவே
மென்சொல்லியை இளமைந்தனை விலைகூறின னெனவே
மன்சொல்லலு நின்சேயையும் மடமானையும் விற்கும்
பொன்சொல்லென விறல்வேலினன் மறையோனொடு புகல்வான். |
|