(இ
- ள்.) என் சொல்லினை முன் சொன்னவை இன்னம் பகர்
எனவே - என்ன சொன்னாய் முன் சொன்ன மொழிகளை இன்னும் ஒரு
முறை சொல் என்று சொன்னவுடன், மென் சொல்லியை இள மைந்தனை
விலை கூறினன் எனவே - மென் மொழி பேசும் இப் பெண்ணையும்
இளமைந்தனாகிய சிறுவனையும் விலை கூறினேன் என்று, மன் சொல்லலும்
நின் சேயையும் மட மானையும் விற்கும் - அரசன் சொன்னவுடன் உன்
மகனையும் மனைவியையும் விற்கின்ற, பொன் சொல் என - விலையாகிய
பொன்னைச் சொல் என்றவுடன், விறல் வேலினன் மறையோனொடு
புகல்வான் - வலிமை வாய்ந்த வேலினை யுடைய மன்னன்
மறையவனிடத்தி்ற் பேசத் தொடங்கினான்.
'முன் சொன்னவை இன்னம் பகர்' என வினவியது, விலைகூறியது
உறுதிதான் என்பதை யறிந்துகொள்வதற்கு எனக் கொள்க. 'விலை
கூறினேன்' என்று மன்னன் சொன்னவுடன் 'மறையோன் எவ்வளவு
விலை?' என்று கேட்டனன்.
(30)
937. |
களபப்பிடர்
மிசைநின்றெறி கவணிற்படு சிலைபோம்
அளவுக்கிரு நிதிநல்கிடி னதுவேவிலை என்றான்
உளதப்பொருண் முழுதும்உன துரையின்படி தருவேன்
தளவத்திரு நகையாளொடு மகனைத்தரி னென்றான். |
(இ - ள்.) களபப் பிடர் மிசை
நின்று ஏறி கவணிற் படு சிலை
போம் அளவுக்கு - யானையின் முதுகின்மேல் நின்று கவண் எறிந்தால்
அக் கல் போகும் அளவுக்கு, இரு நிதி நல்கிடின் அதுவே விலை
என்றான் - செல்வம் கொடுத்தால் அதுவே விலையாகும் என்றான், உளது
அப்பொருள் முழுதும் உனது உரையின்படி தருவேன் - அப்பொருள்
முழுதும் என்னிடம் உள்ளது உள் சொற்படியே, தளவத் திரு
நகையாளொடு மகனைத் தரின் தருவேன் என்றான் - முல்லை அரும்பு
போன்ற சிறந்த பல் வரிசையுடைய இப்பெண்ணோடு மகனையும்
கொடுத்தால் நான் அவ்வளவு பொருள் தருவேன் என்றான்
(அம்மறையவன்.)
தளவம் + திரு + நகையாள் - தளவத்திரு நகையாள்;
தளவம் -
முல்லையரும்பு. திரு - சிறந்த. தளவநகை எனக் கூட்டுக களபம் - யானை.
பிடர் - முதுகு.
(31)
|
கலி
விருத்தம் |
938. |
இருவ ருக்கும்
இதுவிலை யாமெனிற்
பொருள ளிப்பன்இன் றென்று புகன்றிடத்
தருக அப்பொரு டானெனச் சாற்றலும்
வெருவி லந்தணன் மீளவும் கூறுவான். |
(இ
- ள்.) இருவருக்கும் இது விலையாம் எனில் - இருவருக்கும்
இதுவே விலை என்றால், இன்று பொருள் அளிப்பன் என்று புகன்றிட -
இப்பொழுதே பொருள் கொடுப்பேன் என்று சொன்னவுடன், தருக அப்
பொருள் தான் எனச் சாற்றலும் - அப்பொருளைத் தருக என்று
சொன்னவுடன், வெருவு இல் அந்தணன் மீளவுங் கூறுவான் -
அஞ்சாமையுடைய அந்தணன் மறுபடியும் கூறத் தொடங்கினான்.
|