(இ
- ள்.) என் பொருள் வந்தது மாதையும் சேயையும் அந்தணற்கு
அளித்து ஆவணம் நல்கு என - எனக்கு வரவேண்டிய பொருள்
வந்துவிட்டது இப் பெண்ணையும் மைந்தனையும் அந்தணனுக்குக்
கொடுத்து விலைச்சீட்டு எழுதி கொடு என்றவுடன், முந்த ஆவணம் தீட்டி
முடிந்தபின் முதலில் விலைச்சீட்டு எழுதி முடிந்தபிறகு, மைந்தனோடு
மயிலை வழங்கினான் - மைந்தனுடன் மயில்போன்ற சந்திரமதியைக்
கொடுத்தான்.
மனைவி
மக்களை விலைக்கு விற்றலும் சீட்டெழுதிக் கொடுத்தலும்
அக்கால வழக்கு. மயில் : உவமை ஆகுபெயராகச் சந்திரமதியை
உணர்த்தியது. ஆவணம் - முறிச்சீட்டு. இக்காலத்திற் பத்திரம்
எழுதிக்கொடுப்பது போன்றது அது.
(35)
|
சந்திரமதி
புலம்புதல் |
942. |
வல்லி போற்றி
வருந்தல் எமக்கெனச்
சொல்லி வேற்கட் டுளிபல சிந்திட
அல்லி மாமரைத் தாள்களை அன்புடன்
புல்லி வீழ்ந்து கிடந்து புலம்பினாள். |
(இ - ள்.) வல்லி போற்றி வருந்தல்
எமக்கு எனச் சொல்லி -
வல்லிக்கொடிபோன்ற சந்திரமதி துதித்து எம்மை நினைத்து வருந்த
வேண்டாம் என்று சொல்லி, வேல் கண் துளி பல சிந்திட - வேல்
போன்ற கண்களிலிருந்து நீர்த்துளிகள் பலவற்றைச் சிந்தியவுடன், அல்லி
மாமரைத் தாள்களை அன்புடன் புல்லி வீழ்ந்து - அக இதழ்களோடு
கூடிய தாமரைமலர்போன்ற திருவடிகளை அன்புடன் தழுவிக் கீழே
வீழ்ந்து, கிடந்து புலம்பினாள் - கிடந்து அழுது வருந்தினாள்.
வல்லி - கொடி ; இது உவமையாகுபெயராய்ச் சந்திரமதியை
யுணர்த்தியது. மன்னனைப் போற்றி எனக் கூட்டுக. எமக்கு வருந்தல்
என்று மாற்றுக. வருந்தல், இது 'வருந்தற்க' என்ற பொருளைத் தந்தது :
எதிர்மறை வியங்கோள். தாமரை - மரை எனக் குறைந்தது.
(36)
|
சந்திரமதி
வருந்துதல் |
943. |
நின்று காணு
நிருபரும் யானுமன்
றன்று காண அவாவுறும் செம்முகம்
இன்று காண்டக எய்திய தன்றிமற்
றென்று காண்பன் இனிஎன ஏங்கினாள். |
(இ
- ள்.) நின்று காணும் நிருபரும் யானும் - நின்று பார்க்கின்ற
மன்னர்களும் யானும், அன்றன்று காண அவாவுறும் செம்முகம் -
நாள்தோறும் காண அவாக்கொள்ளும் இச்செவ்விய முகத்தை, இன்று
காண் தக எய்தியது அன்றி - இன்று நான் காணுமாறு அடைந்ததே
அல்லாமல், மற்று இனி என்று காண்பன் என ஏங்கினாள் - இனிமேல்
என்றைக்குக் காண்பேன் என்று ஏங்கி வருந்தினாள்.
|