நின்று
காணும் நிருபர் எனக் கூறியது, வேற்றுநாட்டரசர் வந்து
பலர் நின்று அமையம் வாய்க்காமல் வருந்தி எவ்வாறேனும் காண
வேண்டும் என்று விரும்புவர் என்பதை விளக்கிற்று. அன்று அன்று என்ற
அடுக்கு ஒவ்வொரு நாளும் என்ற பொருளைத் தந்தது. இன்று கண்ட
திருமுகத்தை நான் இனி என்று காண்பேனோ அறியேன் என்று கூறிப்
பெருமூச்சுவிட்டாள்.
(37)
|
தேவதாசன்
புலம்பல் |
944. |
ஏங்கி மன்னன்
இடைவனென் றேபடர்
தாங்கி நாயக தாவிடை என்றயல்
நீங்கி னாளிறை நீள்கழுத் தைத்தழீஇத்
தூங்கி வாய்விட்டுத் தோன்ற லரற்றினான். |
(இ - ள்.) ஏங்கி மன்னன் இடைவன்
என்றே படர் தாங்கி -
இவ்வாறு ஏக்கங்கொண்டு மன்னன் வருந்துவான் என்ற துன்பத்தை
நெஞ்சில் தாங்கிக்கொண்டு, நாயக விடைதா என்ற அயல் நீங்கினாள் -
நாயகனே! விடை கொடு என்று அப்பால் சென்றாள், இறை நீள் கழுத்தைத்
தழீஇ - மன்னனுடைய நீண்ட கழுத்தைத் தழுவிக் கொண்டு, தூங்கி வாய்
விட்டுத் தோன்றல் அரற்றினான் - அசைந்து வாய்விட்டு மைந்தன்
அழுதான்.
சந்திரமதி தன் கணவன் மிகவும் வருந்துவான் என்று
விரைவில்
அவனை விட்டு நீங்கினள். தேவதாசன் தந்தையின் கழுத்தைக் கட்டிக்
கொண்டு அரற்றினான் என்பது.
(38)
945. |
எமைய என்னையும்
யாயையும் தாங்கிய
சுமைஇ றக்கினை யோசுக முற்றதோ
உமைய ணைந்திங் குறவென் றிருந்தவா
றமையு மோஐய னேஎன் றரற்றினான். |
(இ
- ள்.) எம் ஐய என்னையும் யாயையும் தாங்கிய சுமை
இறக்கினையோ - எம் ஐயனே! என்னையும் என் தாயையும் இதுவரை
தாங்கிக்கொண்டிருந்த சுமையை இறக்கிவிட்டனையோ, சுகம் உற்றதோ -
உனக்குச் சுகம் பொருந்தியதோ?, உமை அணைந்து இங்கு உறவென்று
இருந்தவாறு அமையுமோ - உம்மோடு சேர்ந்து இங்கு உறவு என்று
சொல்லிக்கொண்டிருந்ததற்கு இது தகுந்ததோ?, ஐயனே என்று
அரற்றினான் - ஐயனே! என்று சொல்லி அழுதான்.
எம்
+ ஐய = எம்மைய என்று இரட்டி நிற்கவேண்டியது எதுகை
நோக்கி 'எமைய' எனத் தொகுத்தலாயிற்று; இது தொகுத்தல் விகாரம். ஐய,
ஐயனே என்பன விளிகள்.
(39)
946. |
கழுத்தைப்
பூண்டழுங் காதலன் கைகளை
அழுத்த மாம்பற் றறவிடு வித்தனன்
விழித்த கட்பொறி சிந்திட வேதியன்
இழுத்துப் போய்த்தன தில்லிடம் எய்தினான் |
|