பக்கம் எண் :


459

     (இ - ள்.) வேதியன் - விலைக்கு வாங்கிய மறையவன் (அப்போது
வந்து) கழுத்தைப் பூண்டு அழும் காதலன் கைகளை - கழுத்தைப்
பிடித்துக்கொண்டு அழும் மைந்தனுடைய கைகளை, அழுத்தமாம் பற்ற
அற விடுவித்தனன் - அழுத்தமாகிய பற்று அறுமாறு விடுவித்து நீக்கினான்,
விழித்த கண் பொறி சிந்திட - தன் விழித்த கண்களிலிருந்து நெருப்புப்
பொறி சிந்த, இழுத்துப்போய்த் தனது இல்லிடம் எய்தினான் -
இழுத்துக்கொண்டு சென்று தனது இல்லத்தை அடைந்தான்.

     விலைக்கு வாங்கிய மறையவன் கோசிகமுனிவனுக்கு வேண்டும்
பணிபுரிய வந்தவன் ஆதலால் அவனைப்போலவே சினந்து இழுத்துக்
கொண்டு சென்றான் என்று கொள்க.
                                                    (40)

 
       அரிச்சந்திரன் வருந்துதல்
947. கடிய வேதியன் கைதொட் டிழுத்தவக்
கொடுமை கண்டு குலைகுலைந் தேங்கிய
இடிவி ழுந்த மராமர மீதெனும்
படிவி ழுந்தனன் சற்றும் பதைத்திலன்.

       (இ - ள்.) கடிய வேதியன் கை தொட்டு இழுத்த அக்கொடுமை
கண்டு - கடுமையான மறையவன் தன் மைந்தனுடைய கையைத் தொட்டு
இழுத்த அக் கொடுஞ் செயலைக் கண்டு, குலை குலைந்து ஏங்கியே -
மனங் குலைந்து வருந்தியே, இடி விழுந்த மராமரம் ஈ தெனும்படி -
இடிவிழுந்த மராமரம் இதுதான் என்று சொல்லும்படி, விழுந்தனன் சற்றும்
பதைத்திலன் - கீழே விழுந்தான் சிறிதும் பதைக்கவில்லை.

     அரிச்சந்திரன் தன் மைந்தனைப் பற்றி இழுத்த கொடுஞ்செயல்
கண்டு கீழே விழுந்து மயங்கிக் கிடந்தான். சிறிதும் பதைத்திலன் என்றது,
உயிர் போன உடம்புபோற் கிடந்தான் என்பதை யுணர்த்திற்று.
                                                    (41)

 
        மந்திரி தேற்றுதல்
948. வந்து மந்திரி மன்னனைத் தாங்கிநீ
புந்தி இல்லவர் போலப் புலம்புவ
தெந்து காரண மென்றடி போற்றலும்
சிந்தை வாட்டமும் கோட்டமும் தேறினான்.

     (இ - ள்.) மந்திரி வந்து மன்னனைத் தாங்கி - மந்திரி நெருங்கி
வந்து மன்னனைப் பிடித்து, நீ புந்தி இல்லவர் போலப் புலம்புவது எந்து
காரணம் - நீ புத்தி இல்லாதவர் போலப் புலம்புவதற்கு என்ன காரணம்?,
என்று அடி பரிபாற்றலும் - என்று அவன் திருவடிகளை வணங்கினவுடன்,
சிந்தை வாட்டமும் கோட்டமும் தேறினான் - மன்னன் தன் மனவருத்தமும்
அறியாமையும் நீங்கித் தெளிந்தான்.