954. |
ஏற்கு
மோபொருட் குன்னைவிற் றீகுவ
தார்க்கும் மாதவ னெண்ண மறியலாம்
தார்க்கு லாவுவெள் வேலவ தாழ்க்கிலா
தூர்க்கு ளென்னைவிற் றொண்ணிதி நல்கென்றான். |
(இ
- ள்.) பொருட்கு உன்னை விற்று ஈகுவது ஏற்குமோ -
பொருளுக்கு உன்னை விற்றுக்கொடுப்பது பொருந்துமோ?, ஆர்க்கும்
மாதவன் எண்ணம் அறியலாம் - முனிவனுடைய எண்ணம் எல்லோராலும்
அறியப்படும், தார் குலாவு வெள் வேலவ - மாலையணிந்து விளங்குகின்ற
வெண்மையான வேலையுடைய அமைச்சனே, தாழ்க்கிலாது ஊர்க்குள்
என்னை விற்று ஒண் நிதி நல்கு என்றான் - காலந் தாழ்த்தாமல் ஊரினுள்
என்னை விற்று வெள்ளியினிடம் கொடுக்க வேண்டிய செல்வத்தைக்
கொடு என்றான்.
ஆர்க்கும்,
யாராலும் : உருபுமயக்கம்; ஆர்க்கும் - ஆரவாரம்
செய்கின்ற என்றும் பொருள் கொள்ளலாம்.
'நான் பட்ட கடனுக்கு உன்னை விற்றுப் பொருள் கொடுப்பது
தகுமோ? முனிவன் எண்ணம் எவரும் அறிந்ததே! ஆதலால், தாமதியாது
என்னையே விற்றுக் கொடுத்துவிடு' என்று கூறினான் வேந்தன் என்பது.
(48)
|
மந்திரி
மன்னனை விலைகூறி விற்றல் |
955. |
என்ன பாவ
மெனக்குப் பலித்ததென்
றந்ந கர்ப்பல ஆவண வீதிவாய்ப்
பொன்னின் மாமுடி மீதிற்புற் சூடியே
மன்ன னைவிலை மந்திரி கூறுவான். |
(இ - ள்.) என்ன பாவம் எனக்குப்
பலித்தது என்று - என்ன
பாவவினை எனக்கு வந்து நேர்ந்தது என்று, அந் நகர்ப் பல ஆவண
வீதி வாய் - அந்த நகரத்துப் பல கடைத்தெருக்களின் வழியாக,
பொன்னின் மாமுடி மீதில் புல் சூடியே - பொன் முடியின்மேல் புல்லைச்
சூடி, மன்னனை் விலை கூறுவான் - மந்திரி மன்னனை விலை கூறிச்
சென்றான்.
மந்திரி 'இது என்ன பாவச் செயல் எனக்கு வந்து சேர்ந்தது!'
என்று
மனம் வருந்தி மன்னனை விலை கூறினன் தெருவில் என்பது
(49)
956. |
ஆதி நூலின
ராயினு மல்லது
சாதி யீனர்க ளாயினும் சால்புடைக்
கோதி லான்றனைக் கொண்மி னெனப்பல
வீதி தோறும் விலையது கூறினான். |
(இ
- ள்.) ஆதி நூலினர் ஆயினும் - மறைநூல்களைக் கற்ற
அந்தணராயினும், அல்லது சாதி ஈனர்களாயினும் - அல்லது சாதியில்
அழிந்து கீழ்மக்களாயினும், சால்பு உடைக் கோது இலான் தனைக்
|