கொண்மின் என -
சான்றாண்மையுடைய குற்றம் இல்லாத இவனைப்
பெற்றுக்கொள்ளுங்கள் என, பல வீதிதோறும் விலையது கூறினான்
பலவீதிகளிலும் விலை கூறிச் சென்றான்.
மறை
நூலை முதல் நூல் என்பது வழக்கு ஆதலின் 'ஆதி நூல்'
என்றார். சாதியீனர் விலைக்குக் கேட்க அஞ்சுவர் ஆதலின் அமைச்சன்
அவர்களையும் கேட்கச் செய்தான்.
குலத்தில்
உயர்ந்தவர் தாழ்ந்தவர் யாராயினும் இவனை விலைக்கு
வாங்கிக்கொள்ளலாம் என்றும் மந்திரி கூறினான். ஆதிநூலினர் -
அந்தணர், மறையோர். சாதியீனர் - புலையர், பறையர். கொள் + மின் =
கொண்மின் - இது முன்னிலையேவற்பன்மை வினைமுற்று.
(50)
|
வீரவாகு
என்ற புலையன் வருதல் |
957. |
வார
மேதகு மந்திரி மன்னனைத்
தூர மேவிலை கூறிய சொற்கேளா
வீர வாகு எனும்பெயர் மேவினோன்
சூர நீர்மைப் புலைமகன் றோன்றினான். |
(இ
- ள்.) வாரமே தகு மந்திரி - அன்பே பொருந்திய மந்திரி,
மன்னனைத் தூரமே விலை கூறிய சொல் கேளா - தூரத்தில் இருந்தே
மன்னனை விலை கூறிய சொற்களைக் கேட்டு, வீரவாகு எனும் பெயர்
மேவினான் - வீரவாகு என்னும் பெயருடையவன், சூர நீர்மைப் புலை
மகன் தோன்றினான் - சூரத்தன்மையுடைய புலையன் ஒருவன் வந்தான்.
வாரம்
- அன்பு, உரிமை. வார மேதகு - உரிமை பொருந்திய
எனவும் கூறலாம். கேளா - கேட்டு; செய்யா என்னும் வாய்ப்பாட்டு
வினையெச்சம். சூர நீர்மை - வீரத்தன்மை. விலை கூறிய சொற்கேட்டு
வீரவாகு என்ற புலையன் வந்தான். இவன் யமன். கோசிகர் விடுத்த ஆள்
எனக் கொள்க.
(51)
958. |
குடக்க ணூங்கி
மயங்கிய கொள்கையாற்
றடக்கை கால்விதிர்ப் புற்ற தளர்ச்சியான்
விடக்கின் றோறசை விண்டுவின் றண்டினிற்
றொடக்கிக் காவிய திண்பெருந் தோளினான். |
(இ - ள்.) குடக் கள் நுங்கி மயங்கிய
கொள்கையால் - ஒரு
குடம் கள்ளைக் குடித்து மயங்கிய கொள்கையினாலே, தடக் கை கால்
விதிர்ப்புற்ற தளர்ச்சியான் - பெரிய கைகளும் கால்களும் நடுங்குகின்ற
தளர்ச்சியுடையவன், விடக்கின் தோல் தசை - தோலால் மூடியிருக்கின்ற
இறைச்சி வைத்து, விண்டுவின் தண்டினில் - மூங்கில் தண்டில், தொடக்கிக்
காவிய திண் பெருந் தோளினான் - கூடை மேற் கொண்டு மாட்டிக்
காவடியாகக் கொண்ட திண்ணிய பெருந் தோள்களை யடையவன்.
|