பக்கம் எண் :


464

     வீரவாகு என்பவன் ஒரு குடம் கட்குடித்து மயங்கியிருந்தான்.
அதனாற் கால் கைகள் நடுங்கின; தோளிற் காவடி சுமந்து வந்தான்; அக்
காவடியின் இருபுறமும் தோலும் தசையும் தொங்கின. புலையன் நிலைமை
இவ்வாறு எனக் காண்க.
                                                    (52)

 
959. சுமக்கும் காவைத்துத் தூசொடு வாய்புதைத்
துமக்கு வேண்டு முறுபொரு ணல்கிடின்
அமைக்கும் புன்றொழி லாளரெம் போல்பவர்
தமக்கும் விற்கத் தகுதிஉண் டோவென்றான்.

       (இ - ள்.) சுமக்கும் கா வைத்து தூசொடு வாய் புதைத்து -
சுமக்கின்ற காவடியை வைத்துவிட்டு ஆடையினால் வாயை மூடிக்
கொண்டு, உமக்கு வேண்டும் உறு பொருள் நல்கிடின் - உமக்கு
வேண்டிய மிகுந்த பொருளைக் கொடுத்தால், அமைக்கும் புன்
தொழிலாளர் எம் போல்பவர் தமக்கும் - பொருந்திய புன் தொழில்
புரியும் எம்போன்றவர்க்கும், விற்கத் தகுதி யுண்டோ என்றான் - விற்க
விரும்புவீர்களோ? என்றான்.

     அப் புலையன் காவடியை இறக்கிவைத்தான்; ஆடையால் தன்
வாயைப் பொத்திக்கொண்டு 'என்போன்ற புலையர்க்கும் பொருள்
கொடுத்தால் இவரை விலைக்குக கொடுப்பீர்களோ?' என்று வினவினான்
என்பது.
                                                    (53)

 
  அரசன் தன்னை அப்புலையற்கு விற்குமாறு கூறுதல்   
960. அன்ன தன்மை அரசன் மனம்கொளா
அந்ந கர்க்கு ளிவனல தெம்விலைப்
பொன்ன ளிப்பவ னில்லெனப் புந்திவைத்
தென்னை வில்லென் றமைச்சற் கியம்பினான்.

     (இ - ள்.) அன்ன தன்மை அரசன் மனம் கொளா -
அத்தன்மையை அரசன் மனத்தில் நினைத்து, எம் விலைப் பொன்
அளிப்பவன் - எம்மை விலைக்குப் பெற்றுப் பொன்னைக் கொடுப்பவன்,
இந் நகர்க்குள் இவன் அலது இல் என - இந்த நகரத்தினுள் இவன்
அல்லாது வேறு ஒருவரும் இல்லை என்று, புந்தி வைத்து - மனத்தால்
அறிந்து, என்னை வில் என்று அமைச்சற்கு இயம்பினான் - என்னை
இவனுக்கே வில் என்று அமைச்சனிடங் கூறினான்.

     அப் புலையனியம்பியதை மனத்திற் சிந்தித்தான் அரிச்சந்திரன்,
'இவனொருவனைத் தவிர வேறு எவரும் இதுகாறும் வந்து விலை
கேட்டிலர்; ஆதலால் இவனுக்கே நாம் விலைப்படுவது தகுதி' என்று
'இவனுக்கே என்னை விற்றுவிடு' என்றான்.
                                                    (54)

 
  வீரவாகு 'என்ன விலை?' எனக் கேட்டலும்
         மந்திரி கூறுதலும்
  
961. ஆயி னன்றென் றமைச்சனும் அவ்வயின்
மேயி னன்னினி விற்ப னுனக்கென்றான்