|
ஈயும் நல்விலை
யேதெனப் பொன்பதி
னாயி ரம்மென் றமைச்ச னியம்பினான். |
(இ
- ள்.) ஆயின் நன்று என்று அமைச்சனும் அவ்வயின்
மேயினன் - அப்படியானால் நன்று என்று அமைச்சனும் அவ்விடத்தில்
வந்தான், இனி விற்பன் உனக்கு என்றான் - இப்பொழுது உனக்கு
விற்பேன் என்றான், ஈயும் நல் விலை ஏது என - விற்கும் நல்விலை
எவ்வளவு என்று வீரவாகு கேட்க, பொன் பதினாயிரம் என்று அமைச்சன்
இயம்பினான் - பதினாயிரம் பொன் விலை என்று அமைச்சன் கூறினான்.
அரசனுரைத்தது
கேட்டு 'அமைச்சன் உனக்கே விற்கிறேன்' என்று
கூறினன். பதினாயிரம் பொன் விலை என்றும் கூறினன்.
(55)
962. |
தருகு வேனெனத்
தன்பெய ராற்பொறித்
தருளி னன்புலை யற்கமைச் சாவணம்
பொருளை வாங்கிப் புகர்க்களித் தையபோய்
வருக வென்ன மகிழ்ந்தவன் ஏகினான். |
(இ - ள்.) தருகவேன் எனத் தன்
பெயரால் புலையற்கு அமைச்சு
ஆவணம் பொறித்து அருளினன் - வீரவாகு பதினாயிரம் பொன்னும்
தருவேன் என்றவுடன் அமைச்சன் தன் பெயரால் அவனுக்கு விற்பனை
முறி எழுதிக் கொடுத்தான், பொருளை வாங்கிப் புகர்க்கு அளித்து -
அப்பொருளை வாங்கி அமைச்சன் வெள்ளியினிடம் கொடுத்து, ஐய போய்
வருக என்ன மகிழ்ந்து அவன் ஏகினான் - ஐயனே! போய் வருக
என்றவுடன் மகிழ்ந்து அவ் வெள்ளி சென்றான்.
'பதினாயிரம் பொன் நான் தருகிறேன்' என்றான்
வீரவாகு. ஆவணம்
வரைந்து தன் பெயரெழுதிக்கொடுத்தான் அமைச்சன். பின் பொன்னை
வாங்கி வெள்ளிக்குக் கொடுத்து விடுத்தான் என்க.
(56)
963. |
மீளி வேந்தும்
விடக்கின் றசைச்சுமை
தோளில் ஏற்றிப் புலையற் றொடர்ந்தனன்
ஆளி மொய்ம்பி னமைச்சனும் மன்னவன்
றாளில் வீழ்ந்து தளர்ந்து வருந்தினான். |
(இ
- ள்.) மீளி வேந்தும் விடக்கின் தசைச் சுமை - வீரனாகிய
வேந்தன் தோலோடு கூடிய இறைச்சிச் சுமையை, தோளில் ஏற்றிப்
புலையன் தொடர்ந்தனன் - தோளிலே சுமந்துகொண்டு புலையனைத்
தொடர்ந்து போனான். ஆளி மொய்ம்பின் அமைச்சனும் - சிங்கம்
போன்ற வலிமையுடைய அமைச்சனும், மன்னவன் தாளில் வீழ்ந்து
தளர்ந்து வருந்தினான் - மன்னனுடைய கால்களில் விழுந்து மனந்
தளர்ந்து வருந்தினான்.
விடக்கு
- இறைச்சி. தசை - முடைநாற்றம்; விடக்கின் சுமை எனவும்
முடைநாற்றத்தையுடைய சுமை எனவும் கொள்க. புலையன் +
தொடர்ந்தனன் - புலையற் றொடர்ந்தனன் : இரண்ாடம்வேற்றுமைத்
தொகை.
(57)
|