|
மந்திரி
வருந்திப் பிரிந்து போதல் |
964. |
கொற்ற வாநின்
குளிர்மலர்த் தாளிணை
உற்ற நாடொட்டு முன்பணி யேசெயப்
பெற்ற மாதவப் பேறெனக் கின்றொடும்
அற்ற தோவென் றயலழு தேகினான். |
(இ
- ள்.) கொற்றவா நின் குளிர் மலர்த் தாளிணை - மன்னனே!
நின்னுடைய குளிர்ந்து மலர் போன்ற திருவடிகளை, உற்ற நாள் தொட்டும்
உன் பணியே செயப்பெற்ற மாதவப் பேறு - வந்து வணங்கிய நாள்
முதலாக உன் வேலைகளையே செய்யும் பெரிய தவப்பேறு, எனக்கு
இன்றொடும் அற்றதோ - எனக்கு இன்றோடும் நீங்கி விட்டதோ, என்று
அயல் அழுது ஏகினான் - என்று கூறி அழுது பக்கத்தில் விலகிச்
சென்றான்.
'நான்
உன்பால் வந்து சேர்ந்த நாள் முதல் உன் பணியே செய்து
வாழ்ந்தேன்; இன்று முதல் அப் பணி நீங்கியதே! நான் என்னசெய்வேன்
என்று வருந்தினான் அமைச்சன்; பின் பிரிந்தான்.
(58)
965. |
வலைய நீத்த
புயத்திடை வைத்தகா
அலைய வேபின் றொடர்ந்தரிச் சந்திரன்
றொலைவி லாமுடை நாறிய தொன்னெறிப்
புலையன் மேவும் புலைக்குடி னண்ணினான். |
(இ - ள்.) வலையும் நீத்த புயத்திடை
வைத்த கா அலையவே
- தோள் வளைகளை நீக்கின தோளின்மீது வைத்த காவடி அலைந்து
அசைய, அரிச்சந்திரன் பின் தொடர்ந்து - அரிச்சந்திரன் பின் தொடர்ந்து
சென்று, தொலைவு இலா முடை நாறிய தொன் நெறிப் புலையன் மேவும் -
நீங்காத முடைநாற்றம் வீசுகின்ற பழைய வழியில் புலையன் வாழ்கின்ற,
புலைக் குடில் நண்ணினான் - புலால் நாற்றமுடைய குடிசையை
யடைந்தான்.
வலையம் நீத்த புயம் என்றது, மன்னனாக இருந்து
வாகு வலயம்
பூண்டதை நீக்கிய தோள் எனத் தோளின் பெருமை விளக்கியது. அதிற்
காவடி வைத்த சிறுமையை 'கா அலைய' என்பது காட்டிற்று. முடைநாறிய
என்ற அடை புலையனாகிய வீரவாகுவைச் சார்ந்தது. புலை என்பது அவன்
குடிசைக்கு அடைமொழியாய் நின்றதெனக் கொள்க.
(59)
966. |
பார்த்த
வர்க்குப் பசுந்தசை யாய்மறை
கோத்த காவை இறக்கிக் கொடுத்தபின்
ஊத்தைக் கொட்டிலி னுள்ளிருந் தேபுவி
காத்த கோவுடன் காலன் இயம்புவான். |
(இ
- ள்.) பார்த்தவர்க்குப் பசுந் தசையாய் - கண்ணால்
காண்கின்றவர்களுக்குப் பசுமையான தசைபோல இருக்கும், மறை கோத்த
காவை இறக்கிக் கொடுத்தபின் - வேதத்தைக் கோத்திருக்கின்ற காவடியை
இறக்கிக் கொடுத்தபிறகு, ஊத்தைக் கொட்டிலின் உள் இருந்தே -
|