அழுக்கடைந்த கொட்டிலுக்குள்
இருந்துகொண்டு, புவி காத்த கோவுடன்
காலன் இயம்புவான் - உலகத்தை ஆண்ட மன்னனிடம் காலன் ஆகிய
வீரவாகு சொல்லத் தொடங்கினான்.
அரிச்சந்திரன்
சுமந்துவந்த தசை பார்ப்பவருக்கு ஊனாகத்
தோன்றியதேயன்றி, உண்மை வேதமே என்றும், வீரவாகுவாக வந்தவன்
யமனே என்றும் குறிப்பாகக் கூறினர். இது பின்னர் அரிச்சந்திரனைச்
சிவன் 'முன்னிருந்தபடி சென்று அரசுபுரிக!' என்று கூறியபோது 'நான்
புலையனாயிருந்தவன்; அரசுபுரிவது பொருந்தாது' என்று கூற, அப்போது
காலன் வந்து 'சுடலை யாகசாலை என்றும், வேதங்களே இறைச்சிகளாக
இருந்தவென்றும் நானே புலையன் என்றும்' கூறியது (மீட்சிக். 36 - 38)
காண்க.
(60)
|
அரிச்சந்திரனைச்
சுடலை காத்தற்கு விடுத்தல்
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் |
967. |
தூங்கிருள்
கடியும் செந்தீச் சுடலையிற் சுடும் பிணத்துக்
கோங்கிய புலைப்பே றாடை ஒன்றுண்டு பணம்கா லுண்டு
வாங்கியீ தெனக்கு வைத்து வாய்க்கரி சியைநீ யட்டுண்
டாங்கிரு வென்று பின்னும் அண்ணலுக் கவனு ரைப்பான். |
(இ - ள்.) தூங்கு இருள் கடியும்
செந்தீச் சுடலையில் சுடும்
பிணத்துக்கு - மிகுந்த இருளை நீக்குகின்ற செந்தீயுடைய சுடலையிற்
கொண்டுவந்து சுடுகின்ற ஒவ்வொரு பிணத்துக்கும், ஓங்கிய புலைப்பேறு
ஆடை ஒன்று உண்டு - உயர்வோடு மதித்துக்கொடுக்கும் புலையனுக்குரிய
ஆடை ஒன்று உண்டு, பணம் கால் உண்டு - கால் பணமும் உண்டு,
வாங்கி ஈது எனக்கு வைத்து - வாங்கி இவற்றை எனக்கு வைத்துவிட்டு.
வாய்க்கரிசியை நீ இட்டு உண்டு ஆங்கு இரு என்று வாய்க்கரிசியை
மட்டும் நீ சமைத்து உண்டு அங்கு இருப்பாயாக என்று கூறி, பின்னும்
அண்ணலுக்கு அவன் உரைப்பான் - மேலும் மன்னனுக்கு அவன்
உரைக்கத் தொடங்கினான்.
இருள் கடியும் செந்தீச் சுடலை என்றது இரவில் எப்போதும்
தீயெரிந்து இருளை விலக்கும். 'நன்காடு' என்று அதன் சிறப்புக் கூறினன்.
புலைப்பேறு ஆடை - புலையன் பெற்றுக்கொள்வதற்குரிய ஆடை.
இவ்வாடையும் காற்பணமும் வாய்க்கரிசியும் வாங்கிக் கொண்டு
பிணத்தைச் சுடும்படி கூறவேண்டியது அரசன் தொழில் என்று அறிக.
(61)
968. |
எனக்குநீ
பணமும் கொள்ளி ஆடையும் இனிது நல்கி
உனக்குவாய்க் கரிசி தந்தே னுண்டிரு பசியை நீக்கி
மனத்துளே வஞ்ச மின்றி மயானத்தி லுறைவா யென்னத்
தனக்குநே ரில்லான் றானும் நன்றெனச் சுடலை சார்ந்தான். |
(இ
- ள்.) எனக்கு நீ பணமும் கொள்ளி ஆடையும் இனிது நல்கி
- எனக்கு நீ கால்பணத்தையும் கொள்ளி ஆடையையும் இனிமையாகக்
கொடுத்தபிறகு, உனக்கு வாய்க்கரிசி தந்தேன் உண்டு இரு பசியை நீக்கி
- உனக்கு நான் வாய்க்கரிசி கொடுத்தேன் அதனை உண்டு பசியாறி நீ
|