இருப்பாயாக, மனத்துளே
வஞ்சம் இன்றி மயானத்தில் உறைவாய் என்ன
- மனத்தின்கண் வஞ்சனை இல்லாமல் மயானத்தில் நீ வாழ்வாயாக
என்றவுடன், தனக்கு நேர் இல்லான் தானும் நன்று எனச் சுடலை
சார்ந்தான் - தனக்கு ஒப்பு இல்லாதவனாகிய மன்னனும் நன்று என்ற
கூறிச் சுடலையை அடைந்தான்.
காற்பணம்
கொள்ளியாடையும் எனக்குச் சேர்த்துவைத்துக்
கொடுக்கவேண்டும், வாய்க்கரிசியை மட்டும் நீ சமைத்துண்ண வேண்டும்.
மயானத்திலேயே தங்கியிருக்கவேண்டும் என்று ஆணை தந்தான் வீரவாகு.
வஞ்சமின்றி என்றது, 'எனக்குரியவற்றை எடுத்து மறைக்க நினையாதே!'
என்று உண்மைப் பணிபுரிய உரைத்ததாகக் கொள்க.
(62)
|
காவலன்
சுடலை காத்தல் |
969. |
சுட்டவெம்
பிணத்தோ டொக்கத்
தொலைந்துவெந் தெரிந்த கொள்ளிக்
கட்டையும் பாடை சேர்ந்த
கழிகளும் எடுத்துக் கூட்டிக்
கொட்டிலொன் றெடுத்து மேனாள்
கொடுஞ்சவம் கொணர்ந்து போட்ட
கட்டிலொன் றேறிச் செங்கோற்
காவலன் வீற்றி ருந்தான். |
(இ - ள்.) சுட்டவெம் பிணத்தோடு
ஒக்கத் தொலைந்து வெந்து
எரிந்த கொள்ளிக் கட்டையும் - சுட்ட பிணத்தோடு வெந்து எரிந்த
கொள்ளிக்கட்டைகளையும், பாடை சேர்ந்த கழிகளும் - பாடையில்
சேர்த்துக் கட்டிய கழிகளையும், எடுத்துக் கூட்டி - எடுத்து ஒன்றாகச்
சேர்த்து, கொட்டில் ஒன்று எடுத்து - கொட்டகை ஒன்று கட்டி, மேனாள்
கொடுஞ் சவம் கொணர்ந்து போட்ட - முன்னாளில் கொடிய பிணத்தைக்
கொண்டுவந்து போட்ட, கட்டில் ஒன்று ஏறிச் செங்கோற் காவலன்
வீற்றிருந்தான் - கட்டில் ஒன்று எடுத்து அதன்மேல் ஏறி மன்னன்
தங்கியிருந்தான்.
கொட்டில் - கொட்டகை. இஃது ஒரு மனிதன் தனியேயிருந்து
நாற்புறமும் பார்க்குமாறு மேலே கூரை வேய்ந்து வெளியாக அமைப்பது.
கொட்டில் ஒன்று தானே யமைத்துக் கட்டிலில் ஏறியிருந்து காவல்
செய்தான் என்று கொள்க. பிணம் கொண்டுவந்த கட்டில் என இழிவு
கூறினர். முரசு முழங்க அரசுகட்டிலேறி யமர்ந்தவன் இவ்விழிவான
கட்டிலிலும் ஏறினன் என்பதைக் குறிப்பித்ததாயிற்று.
(63)
970. |
பாடையிற்
கொணர்ந்து வைத்த பிணம்சுடு பணமும் கொள்ளி
ஆடையும் வாங்கி யீட்டி ஆண்டகைக் களித்தங் குற்றுக்
கூடையி னிறைத்து நாளும் கொடுத்தவாய்க் கரிசி வைத்தாங்
கோடைமால் களிற்றின் மன்ன னுறைந்தனன் உறைந்த பின்னர். |
|