பக்கம் எண் :


47

  வெண்ணிறக் கொடிகள் பாற் கடல்
   
   அலைபோல் அசைதல்
84. முன்னை மாதவத் தான்முழு துக்குநல்
அன்னை யாமரிச் சந்திரன் தன்னைமால்
என்ன மேல்வளைந் தீண்டிய பாற்கடல்
தன்னை ஒத்த தவளக் கொடிகளே.

     (இ - ள்.) தவளக்கொடிகள் - வெண்மையான
துகிற்கொடிகளெல்லாம், முன்னை மாதவத்தால் முழுதுக்கும் நல்
அன்னையாம் அரிச்சந்திரன் தன்னை மால் என்ன - முற்பிறவியில் செய்த
பெருந்தவத்தால் உலகம் முழுவதுக்கும் நற்றாய் போல வந்து காக்கும்
அரிச்சந்திரனைத் திருமால் என்று கருதி, மேல் வந்து ஈண்டிய பாற்கடல்
தன்னை ஒத்த - மேலே வந்து நெருங்கிய வெண்மையான அலைகளோடு
கூடிய திருப்பாற்கடலை ஒத்திருந்தன.

     வெண்கொடிகள் அசைதல் பாற்கடலில் அலைகள் வீசுதல்போல்
காட்சியளித்தது. அன்னையாம் அரிச்சந்திரன் ஆதல் ஈண்டு போலுதல்.
"ஆள்வாரிலி மாடு ஆவேனோ" என்ற திருவாசகத் தேன் மொழியில்
'ஆவேனோ' என்பதுபோல். மாதவம் : உரிச்சொற்றொடர், ஏகாரம் :
ஈற்றசை.
                                                    (11)

 

  அயோத்தி மகளிர் நாயகரைத் தீநெறிச்செலாது        திருத்தும் திறமையர்  
85. திருக நோக்கியற் சித்திரப் பாவையை
அருக நோக்கிய அன்பரை வல்லியர்
உருக நோக்கிய ஊடலின் நோக்குயிர்
பருக நோக்கும் சமனைப் பழிக்குமே.

     (இ - ள்.) திருக நோக்கு இயல் சித்திரப் பாவையை - பிணங்கிப்
பார்க்குந் தன்மையில் வரையப்பட்ட ஓவியப் பதுமையை, அருக நோக்கிய
அன்பரை - கண்ணைச் சுருக்கிப் பார்க்கின்ற தங்கள் நாயகரை, வல்லியர்
உருக நோக்கிய ஊடலின் நோக்கு - வஞ்சிக்கொடிபோன்ற காதலியர்
மனம் உருகப் பார்க்கின்ற பிணக்கு நோக்கமானது, உயிர் பருக நோக்கும்
சமனைப் பழிக்கும் - உயிரைக் கொண்டுபோகப் பார்க்கின்ற எமனது
பார்வையினும் கொடிதாயிருக்கும்.

     சித்திரப் பதுமையைக் கடைக்கண்ணாற் பார்த்த ஆடவரைப்
பெண்கள் கூற்றுவனினும் கொடிய பார்வையால் வருத்துவர் என்பதாம்.
பெண்கள் தங்கள் கணவர் மனத்தைத் தீநெறிச் செலவிடாது நன்னெறிச்
செலுத்தும் பண்பு வாய்ந்தவர் என்பது புலனாகிறது. பழந்தமிழ்ப்
பெண்மணிகளின் தலைசிறந்த இப்பண்பு இப்படக் காட்சிக்காலப்
பெண்களால் பின்பற்றற்குரியது. அருக - சுருங்க. "பண்டறியேன் கூற்றென்
பதனை இனியறிந்தேன், பெண்தகையாற் பேர்அமர்க் கட்டு" (குறள், 1083)
பெண்களின் நோக்கின் திறனைக் கூற்றின் திறத்திற்கு நாயனார் ஒப்புமை
கூறுதல் காண்க.

     நோக்கம் உயிர் பருகும் தன்மைய தென்பதை,