"கண்டார் உயிருண்ணுந்
தோற்றத்தாற் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்"
-(1084)
என்னுங் குறட்பாவிற் காண்க.
(12)
|
அயோத்தித்
திருநகரின் தேர் அணி |
86. |
முரணெ
டுங்குலி சத்தவன் மூண்டபோர்க்
கரண மக்கரிச் சந்திர னாமெனாச்
சரண டைந்த தடவரை யீட்டம்போல்
திரணெ டும்பரித் தேரணி நிற்குமே. |
(இ - ள்.)
முரண் நெடுங் குலிசத்தவன் மூண்ட போர்க்கு அரண்
நமக்கு அரிச்சந்திரனாம் எனா - வலிமை பொருந்திய நீண்ட வச்சிரா
யுகத்தையுடைய இந்திரன் தொடங்கிய போரில் நம்மைத் துன்பந்
துடைத்துக் காப்பவன் அரிச்சந்திரன் ஆகும் என்று, சரண் அடைந்த
தடவரை ஈட்டம்போல் - அடைக்கலம் என்று வந்தடைந்த பெரிய
மலைக்கூட்டம்போல, திரள் நெடும் பரித் தோ அணி நிற்கும் - திரட்சியும்
நீட்சியும் அமைந்த குதிரைகள் பூட்டப்பட்ட தேர் அணிகள் நிற்கும்.
தேரின் திரட்சிக்கும் நீட்சிக்கும் உயர்வுக்கும்
மலையை உவமை
கூறலின் உவமை அணி. எனா : செய்யா என்னும் வாய்பாட்டு
வினையெச்சம். தடவரை : உரிச்சொற்றொடர். ஏகாரம்
: ஈற்றசை. இந்திரன்
வச்சிரப்படையால் மலைகளின் சிறைகளை அரிந்தான் என்பது இலக்கிய
மரபு. அதனால் அம் மலைகள் முன்னடந்த இந்திரன் போரைக் கருதி
அரிச்சந்திரன்பால் வந்து சரணடைந்தன என்பது கருத்து. இது
தற்குறிப்பேற்றம்.
(13)
|
அயோத்தியில்
பல நிலையங்கள் |
87. |
ஏம
சாலையும் இன்னிசைச் சாலையும்
ஓம சாலை யுடனறச் சாலையும்
தூம சாலையும் தோகையர் மாதவக்
காம சாலையும் மேகணக் கில்லவே. |
(இ
- ள்.) ஏம சாலையும் - நிதிச் சேமிப்புச் சாலைகளும், இன்
இசைச் சாலையும் - இனிய இசைப் பயிற்சிச் சாலைகளும், ஓம சாலையுடன் அறச்சாலையும்
- யாகசாலையுடன் அறநிலையங்களும், தோகையர் தூம
சாலையும் - பெண்களின் சமையற் கட்டுக்களும், மாதவக் காம சாலையும்
- மெய்த் தவத்தினையே விரும்புகின்ற தவப் பள்ளிகளும், கணக்கு இல்ல
- எண்ணிறந்தன.
சாலையுமே
- தோகையர். தோகை என்பது சினையாகுபெயராய்
மயிலினை உணர்த்தி மயிலின் சாயல் போன்ற சாயலுடைய பெண்களுக்கு
உவமையாகு பெயராய் நிற்றலின் இருமடியாகுபெயர்.
ஏமம்
- பொன். ஓமம் - வேள்வி. அறச்சாலை - அறங்கள்
முப்பத்திரண்டும் நடக்கும் இடம். தூமம் - புகை. இது அப் புகையுடைய
|