மதிவலோய் இதற்கு
வாடி வருந்தலை என்று சொன்னான் - அறிவு
வல்லமையுடைய அமைச்சனே! இதற்கு நீ வாடி வருந்தவேண்டாம்'
என்று மன்னன் சொன்னான்.
திருமாலும்
பிரமனும் கடக்கமுடியாத விதிச்செயலை நாம் விலக்க
இயலுமோ? வருவது வரும்; இதற்கு வருந்தாதே!' என்று தேற்றினான்
மன்னன் என்க.
(68)
975. |
என்னவே அமைச்சன்
றேறி யிருந்தனன் இருக்க வேந்தன்
முன்னமே உய்த்து வைத்த அரிசியை முறையி னீந்தான்
இன்னமு தடுவ தற்கென் றெண்ணியே அமைச்சன் வீழ்ந்து
பொன்னடி வணங்கி வாங்கிப் புல்லினிற் பொதிந்து கொண்டான். |
(இ - ள்.) என்னவே அமைச்சன்
தேறி இருந்தனன் - மன்னன்
இவ்வாறு கூறியவுடன் அமைச்சன் மனம் தேறி இருந்தான், இருக்க -
அவ்வாறு அமைச்சன் இருந்தபொழுது, முன்னமே உய்த்து வைத்த
அரிசியை முறையின் ஈந்தான் - முன்பு சேர்த்துவைத்திருந்த அரிசியை
மன்னன் முறைப்படி அமைச்சனுக்குக் கொடுத்தான், அமைச்சன் வீழ்ந்து
பொன்னடி வணங்கி - அமைச்சன் கீழே விழுந்து மன்னனுடைய பொன்
போன்ற மலரடிகளை வணங்கி, இன் அமுது அடுவதற்கென்று எண்ணியே
- இனிமையான உணவு சமைப்பதற்கு என்று எண்ணி, வாங்கிப் புல்லினிற்
பொதிந்து கொண்டான் - வாங்கிப் புல் கற்றையில் முடிந்துகொண்டான்.
மன்னன் வாய்க்கரிசியை எடுத்து மந்திரியிடம்
கொடுத்தான்;
அதனைப் புற்கற்றையின் வாங்கிப் பொதிந்துவைத்துக்கொண்டான்'
பின்னர்ச் சோறு சமைப்பதற்காக என்க.
(69)
976. |
மண்டலத்
திறைவ னுய்த்து வைத்தவாய்க் கரிசி தன்னைக்
கொண்டுபோய்ச் சுரபிக் கீந்து கோமயத் துடனே வீழ்ந்த
தண்டுலம் எடுத்துக் குத்திச் சமைத்தினி துதவ வச்சோ
றுண்டவ னுறைந்தான் பின்னை உற்றவா றெடுத்து ரைப்பாம். |
(இ
- ள்.) மண்டலத்து இறைவன் உய்த்து வைத்த வாய்க் கரிசி
தன்னை - மாநிலத்தை ஆண்ட மன்னன் சேர்த்துவைத்துக் கொடுத்த
வாய்க்கரிசியை, கொண்டு போய்ச் சுரபிக்கு ஈந்து - கொண்டுபோய்ப்
பசுவுக்கு உண்ணக் கொடுத்து, கோமயத்துடனே வீழ்ந்த தண்டுலம்
எடுத்துக் குத்தி - சாணத்துடன் வீழ்ந்த அரிசியை எடுத்துக் குத்தி,
சமைத்து இனிது உதவ சோறு உண்டு - சமைத்து இனிதாகக் கொடுக்க
அச் சோற்றை உண்டு, அவன் உறைந்தான் - மன்னன் தங்கினான்,
பின்னை உற்றவாறு எடுத்து உரைப்பாம் - பிறகு நடந்த வற்றை எடுத்துச்
சொல்வாம்.
மந்திரி
வாய்க்கரிசியைக் கொண்டுபோய்ப் பசுவுக்குக் கொடுத்துப்
பின் சாணமாக வர, அதனைக் கழுவியெடுத்துக் குத்திச் சோறு சமைத்து
மன்னனும் தானும் உண்டு மகிழ்ந்திருந்தனர்.
(70)
காசி
காண்டம் முற்றிற்று.
|