பக்கம் எண் :


472

8. மயான காண்டம்
 

        [அரிச்சந்திரன் மயானங் காத்தபோது நிகழ்ந்த செயல்கள்
                      யாவும் இதிற் கூறப்படும்.]

      தேவதாசனும் சந்திரமதியும் செய்யும் தொழிலும்
              மறையோனியல்பும்


     அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
977. வல்லியும் மகனும் அந்த மறையவன் மனையிற் சேர்ந்து
சொல்லிய பணிக ளெல்லாம் சோர்வறச் செய்த பின்னும்
எல்லியோர் சாமம் என்ன எழுந்திருந் தேவன் முற்றி
அல்லிரு சாமஞ் சென்றா லளித்தகூ ழுண்டு றங்கி.

       (இ - ள்.) வல்லியும் மகனும் - சந்திரமதியும் அவள் மகனும்,
அந்த மறையவன் மனையிற் சேர்ந்து, விலைக்கு வாங்கிய அந்த
அந்தணனுடைய வீட்டிற் சேர்ந்து - சொல்லிய பணிகள் எல்லாம் சோர்வு
அறச் செய்த பின்னும் - சொல்லிய வேலைகளையெல்லாம் குற்றம்
இல்லாமல் செய்த பிறகும், எல்லி ஓர் சாமம் என்ன எழுந்திருந்து ஏவல்
முற்றி - இரவு விடிய இன்னும் ஒரு சாமம் இருக்கிறது என்னும் பொழுதில்
எழுந்திருந்து வேலை முடித்து, அல் இரு சாமம் சென்றால் அளித்த கூழ்
உண்டு உறங்கி - இராப்பொழுது வந்து இரண்டு சாமம் ஆயினபின் அம்
மறையவன் அளித்த கூழை உண்டு உறங்கி (வாழ்ந்தனர்). 'வாழ்ந்தனர்'
என்ற பயனிலை வருவித்துக் கொள்க.

     சந்திரமதியும் தேவதாசனும் மறையவன் மனையில் வேலைசெய்யும்
விதமும் உணவுண்டுறங்கு முறையும் இக் கவியில் விளக்கினர். விடிய ஒரு
சாமம் இருக்கிறது என்று சொல்லும்போது எழுந்திருப்பார் என்பதும், இரவு
இரண்டு சாமம் சென்றபின் உண்டுறங்குவார் என்பதும் அறிக. சாமம்
ஏழரை நாழிகை; (மூன்றுமணி நேரம்) என்று கொள்க. எல்லி - இரவு.
அல் - இரவு.
                                                     (1)

 
978. கையினி லுலக்கை பற்றிக் கரந்தனி லுதிரம் பாய
மெய்யினில் வெயர்நீர் சிந்த விழியினி லருவி பாய
நெய்யினின் முடித்த கூந்த னெற்குத்தும் கொடுமை காணா
மையினிற் றிகழ்வேற் கண்ணா ரரம்பையர் மறுகிச் சோர்ந்தார்.

     (இ - ள்.) கையினில் உலக்கை பற்றிக் கரந்தனில் உதிரம் பாய -
கையில் உலக்கையைப் பற்றிக்கொண்டு அக் கையில் உதிரம் சிந்தும் படி,
மெய்யினில் வெயர் நீர் சிந்த - உடம்பிலிருந்து வெயர்வைநீர் சிந்த,
விழியினில் அருவி பாய - கண்களிலிருந்து கண்ணீர் அருவி போல்
ஒழுகவும், நெய்யினில் முடித்த கூந்தல் - மணநெய் பூசி முடித்த கூந்தலை