யுடைய பெண், நெற்
குத்தும் கொடுமை காணா - நெல்லைக் குத்துகின்ற
கொடுமையைக் கண்டு, மையினிற் திகழ் வேற் கண்ணார் - மை
பூசப்பெற்று விளங்குகின்ற வேல் போன்ற கண்களையுடைய, அரம்பையர்
மறுகிச் சோர்ந்தார் - தேவப்பெண்கள் வருந்திச் சோர்ந்தார்கள்.
சந்திரமதி
நெற்குற்றும் கொடுமை கண்டு அரம்பையரும் மனம்
கலங்கி வருந்தினர் என்பது. கண்ணார், அரம்பையர் என இரண்டாக்கி
மண்ணுலக மாதரும் விண்ணுலக மாதரும் கண்டு வருந்தினர் எனவும்
கொள்ளலாம்; காசிநகர்ப் பெண்கள் கண்டவரும் வருந்துவது
இயற்கையாதலின்.
(2)
979. |
புன்கணுற்
றரம்பை மாதர் வருந்தவும் புந்தி செய்யா
வன்கண னிரக்க மில்லான் மடித்தவாய் வெடித்த சொல்லான்
றன்கணன் பில்லான் பொல்லான் றறுகணன் விலைகொண்
டாள்வோன்
இன்கணில் லாதாள் பாரி யிவனிலும் கொடிய பாவி. |
(இ - ள்.) புன்கண் உற்று அரம்பை
மாதர் வருந்தவும் - துன்பம்
உற்று அரம்பைப் பெண்கள் வருந்தவும், விலை கொண்டு ஆள்வோன் -
விலை கொடுத்து வாங்கி ஆளுகின்ற மறையவன், புந்தி செய்யா வன்கணன்
- சந்திரமதி படும் துன்பத்தை நினையாத கொடுமையுடையவன், இரக்கம்
இல்லான் - இரக்கம் சிறிதும் இல்லாதவன், மடித்த வாய் வெடித்த
சொல்லான் - மடித்த வாயினையும் வெடித்த சொல்லையும் உடையவன்,
தன்கண் அன்பு இல்லான் - தன்னிடத்தில் சிறிதும் அன்பு இல்லாதவன்,
பொல்லான் - பொல்லாத தன்மையுடையவன், தறுகணன் - அஞ்சாதவன்,
பாரி இவனிலும் கொடிய பாவி - அவன் மனைவி அவனைக் காட்டிலும்
கொடிய பாவி ஆவாள், இன்கண் இல்லாதாள் - இரக்கத்தன்மை சிறிதும்
இல்லாதவள்.
அரம்பையரும்கூட இரங்கினர், சந்திரமதி அல்லும்
பகலும் நெற்
குற்றி வருந்துவது கண்டு. ஆயினும், மறையவனும் அவன் மனைவியும்
மனஞ்சிறிதும் இரங்கிலர் என்பது. இன்கண் - இரக்கம்; வன்கண்
என்பதற்கு எதிர்மறை மொழி என்க.
(3)
980. |
அடியினால்
அஞ்சி மைந்தன் அனந்தலைப் பயமு ணர்த்த
விடியுமுன் னெழுந்தி ருந்து விளைபுலங் களைப றித்துக்
கடிவனத் தடகு கொய்து காட்டமும் சமிதை யும்பொன்
முடிபுனை தலையில் வைத்து முறைமுறை வருமந் நாளில். |
(இ
- ள்.) மைந்தன் அடியினால் அஞ்சி - தேவதாசன்
மறையோன் அடித்த அடியினால் அச்சங்கொண்டு, பயம் அனந்தலை
உணர்த்த - அந்தப் பயம் உறக்கத்தை நீக்க, விடியுமுன் எழுந்திருந்து -
அதனாற் பொழுது விடிவதற்குமுன் எழுந்திருந்து, விளை புலம் களை
பறித்து - விளைநிலத்திலே களையவேண்டிய களையைப் பறித்து நீக்கி
விட்டு, கடி வனத்து அடகு கொய்து - காவல் உள்ள காட்டிலே
கிரைகளைக் கொய்து, காட்டமும் சமிதையும் - அடுப்புக்குரிய விறகும்
ஒம விறகும், முடி புனை
|