தலையில் வைத்து முறை
முறை வரும் அந் நாளில் - பொன் முடி
புனையும் தலையில் வைத்து முறையாகக் கொண்டு வரும் அந்த நாளில்;
அனந்தல்
- உறக்கம்; உணர்த்த - நீக்க. முதல் நாள் பட்ட
அடியால் விளைந்த அச்சம் மறுநாள் சிறுவன் துயிலை உணர்த்தியது.
தானே உணர்ந்து எழுந்து விடுகிறான் என்பது. களை பறித்தல் காலையில்
செய்யும் வேலை. அடகு - ஆல், புரசு இவற்றின் இலை என்றும்
கொள்ளலாம். தைத்து உண்கலமாகக் கொள்வதற்கு இவை பயன்படும்.
காட்டம் - விறகு. சமிதை - ஓமம் வளர்க்கும் ஒன்பது வகை விறகுக்
குச்சிகள், அவை : (1) முருக்கு, (2) கருங்காலி, (3) நாயுருவி, (4) அரசு, (5)
அத்தி, (6) மா, (7) வன்னி, (8) ஆல், (9) இத்தி என்பன.
(4)
|
தேவதாசன்
விறகெடுக்க வனத்திற்குச் செல்லல் |
981. |
மைந்தனும்
சிறாரோ டேகி வனந்தனில் விறகு கட்டித்
தந்திடு வழியி னோர்பாற் றருப்பைகண் டிதுவிட் டேகில்
அந்தணன் முனிவா னென்னா வஞ்சியோர் வடத்தி னீழல்
இந்தனம் இறக்கி யப்பு லிருந்திடு புதர்க்கட் சென்றான். |
(இ - ள்.) மைந்தனும் சிறாரோடு
ஏகி - தேவதாசன் மற்றை
வீட்டுச் சிறுவர்களுடன் சென்று, வனந்தனில் விறகு கட்டித் தந்திடு
வழியின் ஓர்பால் - காட்டில் உள்ள விறகைக் கட்டிக்கொண்டு வருகின்ற
வழியில் ஒருபக்கம், தருப்பை கண்டு இது விட்டு ஏகில் - தருப்பையைப்
பார்த்து இதனை விடுத்துச் சென்றால், அந்தணன் முனிவான் என்னா
அஞ்சி - மறையவன் சினந்து தண்டிப்பான் என்று பயந்து, ஓர் வடத்தின்
நீழல் இந்தனம் இறக்கி - ஓர் ஆலமரத்தின் அடியில் விறகை
இறக்கிவைத்துவிட்டு, அப்புல் இருந்திடு புதர்க்கண் சென்றான் - அந்தப்
புல் இருக்கும் புதரிடத்தில் சென்றான்.
வடம் - ஆலமரம். நிழல் : நீழல் என நீண்டது
விகாரம். இந் தனம்
- விறகு. புல் - தருப்பைப் புல். ஒருநாள், தேவதாசன் விறகெடுத்து
வரும்போது தருப்பைப்புல் இருக்கும் இடங் கண்டு விறகுக் கட்டை
இறக்கிவைத்துத் தருப்பை கொய்யச் சென்றான் என்பது.
(5)
|
தேவதாசனைப்
பாம்பு கடித்தல்
|
982. |
பறித்தனன்
குசையைப் பற்றிப் பறித்தலும் முனிவன் ஏவக்
குறித்துவந் ததனுட் டங்குங் கோளராச் சீறி யோங்கித்
தெறித்தழல் விழியாற் சிந்தத் தீண்டிற்றுத் தீண்ட லோடும்
வெறித்தெழுந் தலறி யோடி வெருவியே தரையில் வீழ்ந்தான். |
(இ
- ள்.) குசையைப் பற்றிப் பறித்தனன் - தருப்பையைப்
பிடித்துப் பறித்தான், பறித்தலும் - பறித்தவுடன், முனிவன் ஏவக் குறித்து
வந்து அதனுள் தங்கும் கோளராச் சீறி ஓங்கி - முனிவன் ஏவுதலினால்
குறிப்பாக வந்து அதனுள் தங்கியிருந்த கொல்லும் பாம்பு சீறிப்
படமெடுத்து நின்று,
|