987. |
மடத்தகை
வல்லி பின்னு மைந்தரை நோக்கி யெந்த
இடத்திலே இறந்தா னென்ன யாம்வரு வழியி னிற்கும்
வடத்தினுக் கயலே சற்றே வடக்கினிற் குசைப டர்ந்த
தடத்தினிற் றெற்கே என்று சாற்றியே அவர்கள் போனார். |
(இ
- ள்) மடத்தகை வல்லி பின்னும் மைந்தரை நோக்கி -
இளமைத்தன்மை பொருந்திய வல்லிக்கொடி போன்ற சந்திரமதி மேலும்
அச் சிறுவர்களை நோக்கி, எந்த இடத்திலே இறந்தான் என்ன - எந்த
இடத்திலே இவன் இறந்தான் என்று கேட்க, யாம் வரும் வழியில் நிற்கும்
வடத்தினுக்கு அயலே சற்று வடக்கினில் - யாங்கள் வருகின்ற வழியில்
நிற்கின்ற ஆலமரத்துக்குப் பக்கத்தில் சற்று வடக்கில், குசை படர்ந்த
தடத்தினில் தெற்கே என்று சாற்றியே அவர்கள் போனார் - தருப்பை
படர்ந்த இடத்திற்குத் தெற்கே என்று கூறி அவர்கள் சென்றார்கள்.
சந்திரமதி
தெளிந்து எழுந்து 'எவ்விடத்தில் இறந்துகிடக்கின்றான்!'
என்றாள்; வழியினிற்கும் ஆலமரத்திற்கு வடக்கில் தருப்பை படர்ந்த
இடத்திற்குத் தெற்கில் என்று கூறிச் சென்றனர் அச்சிறார்கள்.
(11)
988. |
அறுதியீ தென்று
சால வறிவழிந் துருகி வீழ்ந்து
மறுகினா ளுடையோர்க் கஞ்சி வாய்திறந் தரற்றாள் மாழ்கிச்
சிறுதொழின் முழுதும் செய்து தீர்ந்தபின் றேடிச் சேறல்
உறுதியென் றுளத்தி னுள்ளே ஒடுக்கிவந் தகத்திற் புக்காள். |
(இ
- ள்) அறுதி ஈது என்று சால அறிவு அழிந்து உருகி வீழ்ந்து
- முடிவு இது என்று மிகவும் அறிவு கெட்டு மனம் உருகி வீழ்ந்து,
மறுகினாள் - மயங்கிக்கிடந்தாள், உடையோர்க்கு அஞ்சி வாய் திறந்து
அரற்றாள் - தன்னை விலைகொடுத்து வாங்கிய மறையோனுக்கும் அவன்
மனைவிக்கும் அஞ்சி வாய் திறந்து அழாதவளாய், மாழ்கிச் சிறு தொழில்
முழுதும் செய்து தீர்ந்தபின் - மனம் வருந்திச் செய்ய வேண்டிய
சிறுதொழில்கள் முழுவதும் செய்து முடிந்தபிறகு, தேடிச் சேறல் உறுதி
என்று உளத்தின் உள்ளே ஒடுக்கி வந்து - தேடிச் செல்வதுதான் முடிவு
என்று மனத்தினுள்ளே கவலையை ஒடுக்கிக் கொண்டு வந்து, அகத்திற்
புக்காள் - மனையினுள் புகுந்தாள்.
உடையோர்க்கு
அஞ்சி என்றது, தன்னை விலைக்கு வாங்கிய
மறையோனுக்கும் அவன் மனைவிக்கும் பயந்து என்ற பொருளை
யுணர்த்திற்று. தனக்குரிய பணிகளைச் செய்து முடித்தபின்
தேடிச்செல்வதென உறுதி கொண்டாள் சந்திரமதி. சிறுதொழில் -
குற்றேவல். இது மனையிலுள்ள கலம் கழுவுதல், உடை தோய்த்தல்
முதலிய தொழில்களை யுணர்த்தும்.
(12)
|
சந்திரமதி
தன் மைந் தனிறந்தது கூறி மறையோனிடம்
விடை
கேட்டல்
|
989. |
முறைமுறை பணிக
ளெல்லாம் செய்தற முடித்துப் பின்னர்
மறையவன் றன்னை ஏத்தி வாய்புதைத் தழுது விம்மி |
|