பக்கம் எண் :


480

நின்று தயங்கியே மயங்கி வீழ்வாள் - நின்று மனம் தயங்கி மயங்கி
வீழ்வாள், காவி அம் கண்ணீர் பாயக் கதறுவள் - நீலமலர் போன்ற
கண்களிலிருந்து கண்ணீர் பாயும்படி கதறுவாள், பதறி ஏங்கி - மனம்
பதறி வருந்தி, ஆவியைத் தேடித்தேடி அலமரும் உடலம் ஒத்தாள் -
உயிரைத் தேடித்தேடி வருந்துகின்ற உடல் போன்று இருந்தாள்.

     சந்திரமதியின் துயரத்தை ஆசிரியர் ஆவியைத் தேடித்தேடி
அலமரும் உடலம் ஒத்தாள் என உவமையால் விளக்கினார். சந்திரமதி
உடலில் உயிரில்லை. தன் மகன் கிடக்கின்ற இடத்திற்கே போய் விட்டது.
வெற்றுடம்புதான் அலைந்து பதைத்து மயங்கி எழுந்து செல்கின்றது.
உயிரும் இல்லை, உணர்வும் இல்லை. அந்நிலையிற் சென்றாள் என அறிக.
                                                    (17)

 
994. ஆறெலா மடிகள் வைத்த வடியெலாம் விழிநீர் நின்ற
தூறெலாம் அரிவை சென்ற சுவடெலாம் குருதி தொட்ட
மாறெலாம் கூந்த றுன்று வனமெலாந் துணிகள் யார்க்கும்
தேறலாம் தகைமைத் தன்றிச் செடியெலாம் தேடிச் சென்றாள்.

       (இ - ள்.) ஆறு எலாம் அடிகள் - எல்லா வழிகளிலும்
சந்திரமதியின் அடிச் சுவடுகள், வைத்த அடி எலாம் விழி நீர் நின்ற -
அவள் அடி வைத்த சுவடுகளில் எல்லாம் கண்ணீர் நின்றது, தூறு எலாம்
அரிவைசென்ற சுவடெலாம் குருதி தொட்ட - வழியில் உள்ள தூறுகள்
கிழித்தலால் அவள் சென்ற சுவடுகளில் எல்லாம் இரத்தம் பெருக்குநின்றது,
மாறு எலாம் கூந்தல் - கிளைகளில் எல்லாம் சந்திரமதியின் கூந்தல் சிதறி
அறுபட்டுக் கிடந்தது, துன்று வன மெலாம் துணிகள் - நெருங்கிய காடு
முழுவதும் இவளுடைய கிழிந்த துணிகள், யார்க்கும் தேறலாம் தகைமைத்
தன்றிச் செடி யெலாம் தேடிச் சென்றாள் - யாராலும் கண்டுபிடிக்கமுடியாத
நிலையில் உள்ள செடிகளில் எல்லாம் தேடிக்கொண்டு சந்திரமதி
சென்றாள்.

     காலடிச் சுவடுகளில் கண்ணீரும் உதிரமும் நின்றன. அவளுடைய
கூந்தலையும் ஆடையையும் மரக்கிளைகளும் செடிகளின் கிளைகளும்
கிழித்தன. அவள் உடலைக் கிழித்ததனால் வடிந்த குருதி அவளடிச்
சுவட்டில் நின்றது கருதி 'சுவடெலாங் குருதி' என்றார்.
                                                    (18)

 
       இறந்த மைந்தனைக் காண்டல்
995. ஓடினாள் உள்ளம் எல்லாம் உருகினாள் கருகி மேனி
வாடினாள் விறகு வைத்த வடத்தினுக் கருகே வந்தாள்
நாடினாள் கழுகும் பேயும் நரிகளும் குறளும் துன்றிக்
கூடிய குழவி னாப்பண் குமரனைச் சென்று கண்டாள்.

     (இ - ள்.) ஓடினாள் உள்ள மெல்லாம் உருகினாள் - ஓடினாள்
மனம் முழுவதும் உருகினாள், மேனி கருகி வாடினாள் - உடம்பு
முழுவதும் கருகி வாடினாள், விறகு வைத்த வடத்தினுக்கு அருகே வந்தாள்
- விறகு வைத்திருந்த ஆலமரத்துக்கு அருகே வந்தாள், நாடினாள் -
மைந்தன்