பக்கம் எண் :


483

999. வானின் றிழிந்து சொரிகின்ற தாரை
   மழைபோல வீழ விழிநீர்
ஊனின்றி மேனி உதிரங்கள் சிந்த
   வுயிரின்றி வெம்பு தழலின்
மேனின்று வெந்த தளிர்போல் மயங்கி
   விதியாரை நொந்து தனியே
யானின் றிரங்க வேனென்ப தில்லை
   இதுவோவு னீதி மகனே.

     (இ - ள்.) வானின்று இழிந்து சொரிகின்ற தாரைமழைபோல
விழிநீர் வீழ - வானத்திலிருந்து இறங்கிப் பொழிகின்ற தாரை மழை
போலக் கண்ணீர் வடியவும், ஊன் இன்றி மேனி உதிரங்கள் சிந்த -
உடம்பில் தசை இல்லாமல் குருதி சிந்தவும், உயிர் இன்றி - உயிர்
இல்லாதவள் போலவும், வெம்பு தழலின் மேல் நின்று வெந்த தளிர் போல்
மயங்கி - வெதுப்புகின்ற நெருப்பின்மேல் நின்று வெந்த தளிர் போல
மயக்கங்கொண்டு, விதியாரை நொந்து - என்னைப் படைத்த அயனை
நொந்து கொண்டு, தனியே யான் நின்று இரங்க - தனியாக யான் நின்று
இரங்கும்போது, ஏன் என்பது இல்லை - ஏன் இவ்வாறு வருந்துகின்றாள்
எனக் கேளாமல் இருக்கின்றாய், இதுவோ உன் நீதி மகனே - மகனே!
இதுதானோ உன் நீதிமுறை? (என்றும் புலம்பினாள்.)

     'நான் உன்னைத் தேடித் தனியே வரும்போது என்னுடம்பு முழுதும்
மரக்கிளைகளும் புதர் முட்களுங் கிழித்துக் குருதி யொழுகுவதையும்,
கண்ணீர் மழைத் தாரைபோலச் சிந்துவதையும், தழலிற் பட்ட தளிர்போல
உடல் வாடி நான் நிற்பதையும் கண்டு ஏன் வருந்துகிறாய் என்று நீ
கேட்கவில்லையே! இஃது உன்னறிவுக்குத் தகுமோ?' என்றும் கூறி
அழுதாள்.
                                                    (23)

 
1000. செங்கோ லறத்தின் முறையே செலுத்து
   திறலோ னெவர்க்கு முரவோன்
வெங்கோப யானை விறன்மன்ன னம்மை
   விடுவிக்க வெண்ணி வருநாள்
பங்கே ருகத்து மலர்போல் விளங்கு
   வதனா மகிழ்ந்த பரிவால்
எங்கேயெ னாசை மகனென் றுரைக்கில்
   எதிரேது சொல்வன் மகனே.

       (இ - ள்.) செங்கோல் அறத்தின் முறையே செலுத்து திறலோன்
- செங்கோல் ஆட்சியை அறநெறிப்படியே செலுத்துகின்ற
வல்லமையுடையவன், எவர்க்கும் உரவோன் - யாவரினும் வலிமை
யுடையவன், வெம் கோப யானை விறல் மன்னன் - கொடிய கோபம்
கொண்ட யானையுடன் வலிமையும் உடைய மன்னன் ஆகிய உன் தந்தை,
நம்மை விடுவிக்க எண்ணி வரும் நாள் - நம்மை விடுதலை செய்ய