அழகாகுமோ?, யமனே
- எமனே!, அடியேனை ஒக்க முடியாதிருத்தல்
மிக்க அநியாயம் - அடியேனையும் மகனுடன் சேர இறக்கச்
செய்யாதிருத்தல் மிகுந்த அநியாயமாகும் (என்றும் கூறி யழுதாள்.)
முனிக்கு
வளநாடளித்த கொடையார் என்றது, அரிச்சந்திரனுடைய
பெருமையைக் குறித்ததாம். 'இத்தகைய பெருமையுடைய மன்னர் மைந்த
னிறந்தபின்னும் நான் வாழ்ந்திருந்தால் என்னைக் காண வருவரோ? என்
முகத்தில் விழிப்பாரோ? நான் இருந்து பயன் என்ன? யமனே! என்னையும்
கொன்றுவிடு' என்றும் கூறிப் புலம்பினாள்.
(32)
|
எண்சீர்க்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
1009. |
எனமறுகி யிவனுடனாம்
இறந்தே மாகில்
இவனைஎடுத் தெரித்தடக்க உரியா ரில்லை
மனமுருகா னம்மைவிலை கொண்டோன் சால
வன்கண்ணன் மனைவியவன் றனின்மா பாவி
சினமுடையார் விடியுமுதற் செல்லே னாகிற்
செறுவரிவன் றனைக்கருக்கிச் செல்வ னென்று
தனதுதிரு மகனைஎடுத் தணிதோள் வைத்துத்
தள்ளாடி மதிதயனார் தனையை மீண்டாள். |
(இ - ள்.) என மறுகி இவனுடன் நாம்
இறந்தேமாகில் - என்று
மேற்கூறியவாறு புலம்பி மயங்கி இவனுடன் நாம் இறந்தோமானால்,
இவனை எடுத்து எரித்து அடக்க உரியார் இல்லை - இவனை எடுத்துச்
சுடலையில் எரித்து அடக்கஞ்செய்ய ஒருவரும் இல்லை, நம்மை விலை
கொண்டோன் சால வன்கண்ணன் மனம் உருகான் - நம்மை விலைக்குப்
பெற்றவனாகிய மறையவள் மிகவும் கொடியவன் மனம் உருகி நன்மை
செய்யமாட்டான், மனைவி அவன்தனின் மா பாவி - அவனுடைய மனைவி
அவனைவிடக் கொடிய பாவி, சினமுடையார் - இருவரும் கொடிய கோபம்
உடையவர், விடியு முதற் செல்லேனாகில் செறுவர் - பொழுதுவிடியுமுன்
நான் செல்லவில்லை என்றால் கோபம் கொள்வர் இவன்தனைக் கருக்கிச்
செல்வன் என்று - இவனைச் சுட்டுப் பின்பு செல்வேன் என்று, தன்
திருமகனை எடுத்து அணி தோள் வைத்து - தன் மகனை எடுத்துத்
தோளின்மேல் சேர்த்துக்கொண்டு, தள்ளாடி மதிதயனார் தனையை
மீண்டாள் - தள்ளாடித் தள்ளாடி மதிதயன் என்ற மன்னனுடைய
மகளாகிய சந்திரமதி சுடலைக்குத் திரும்பினாள்.
மனங்கலங்கிச் சந்திரமதி பின் ஒருவாறு துணிந்தாள்.
'நம்
மைந்தனை எடுத்துச் சுடலையிற் கொண்டுபோய் அடக்கஞ்செய்து விட்டு
விடியுமுன் மறையோன் மனைக்குச் செல்வதுதான் நன்று' என்பது அவள்
துணிபு.
(33)
|