சுடுகாட்டினைப்
பல அறிகுறிகளால் அறிந்த சந்திரமதி தன்
மைந்தனுடலத்தை ஓரிடத்தில் வைத்துவிட்டு எரிந்த குறைக்கட்டைகளைப்
பல இடங்களிலும் ஓடித் தேடி ஒவ்வொன்றாய்ப் பொறுக்கிக் கொண்டுவந்து
சேர்த்துக் குவித்துக் கொள்ளிக்கட்டை ஒன்று கொண்டுவந்து வைத்துத்
தீமூட்டிப் பின் சவத்தை எடுத்து நெருப்பின் மேல் வைத்தாள்.
பரண்மேலிருந்து காத்த மன்னன் அரிச்சந்திரன் அதனைப் பார்த்தான்.
(36)
|
அரிச்சந்திரன்
தன் மைந்தன் என்றறியாமற் சினந்து
காலால்
எற்றுதல் |
1013. |
அரவுகடித்
தரசிளங்கோ இறந்தா னென்ப
தறியாமல் வெகுண்டிறைவ னாரே யிந்த
இரவுதனிற் பிணம்சுடுவா ரறிவோ மென்னா
எழுந்திருந்து விரைந்தோடி யேடி மூடி
தரவுரிய பொருளெனக்குத் தாரா தேநீ
தனியேயிப் பனிஇருளிற் சவங்கொ ணர்ந்து
கரவினழற் சுடுவதுனக் கடைவோ வென்னாக்
கால்வீசிக் கான்முளையை எடுத்தெ றிந்தான். |
(இ - ள்.) அரவு கடித்து அரசிளங்
கோ இறந்தான் என்பது
அறியாமல் - பாம்பு கடித்துத் தன் மைந்தன் இறந்தான் என்பதை
அறியாமல், இறைவன் வெகுண்டு - அரிச்சந்திரன் கோபம் கொண்டு,
ஆரே இந்த இரவுதனில் பிணம் சுடுவார் அறிவோம் என்னா - யார்
இந்த இரவுநேரத்தில் பிணம் சுடுகின்றார் நாம் அறிவோம் என்று,
எழுந்திருந்து விரைந்து ஓடி ஏடி மூடி - எழுந்து விரைவாக ஓடி வந்து
ஏடி மூடத்தன்மையுடையவளே, தர உரிய பொருள் எனக்குத் தாராதே நீ
தனியே இப் பனி இருளில் சவம் கொணர்ந்து - எனக்குத் தர வேண்டிய
பொருளைத் தராமல் இந்தப் பனி கொட்டும் இருளில் தனியே பிணம்
கொண்டுவந்து, கரவின் அழல் சுடுவது உனக்கு அடைவோ என்னா -
திருட்டுத்தனமாக நெருப்பால் பிணத்தைச் சுடுவது உனக்கு முறையோ?
என்று, கால் வீசிக் கான் முளையை எடுத்து எறிந்தான் - கால் வீசி அப்
பிள்ளையை எடுத்து எறிந்தான்.
சுடலை காத்திருந்த அரிச்சந்திரன் தன் மைந்தன்
என்று அறியாமல்
விரைந்து வந்து 'அடி, அறிவில்லாதவளே! எனக்குத் தர வேண்டியதைத்
தராமல் களவாக வந்து பிணத்தைச் சுடுவது தகுமோ?' என்று சினந்து
பேசிக் காலால் அப் பிணத்தை எற்றித் தள்ளிவிட்டான். கான்முளை -
புதல்வன். ஏடி என்பது பெண்களைக் குறிக்கும் முன்னிலை விளி.
உயர்ந்தோர் இழிந்தோரை விளிப்பது, களவிற் சுடவந்த காரணத்தால்
இகழ்ந்து பேசினான் என்று கொள்க.
(37)
|