|
சந்திரமதி
அரிச்சந்திரன் காலில் விழுந்து தன்
குறை
கூறதல் |
1014. |
எறிந்திடலும்
உயிரேங்க வேங்கி வேனில்
இடிவிழுந்தாற் படிமிசையே அடிசாய்ந் தாடி
முறிந்துவிழும் மரம்போற்சென் றடிமேல் வீழ்ந்து
மொழிகுழறி விழிஅருவி சொரிய வல்லி
அறிந்துமில னிவ்வூரில் வழங்கு நீதி
அருவினையே னாருமிலி யறவும் பாவி
மறிந்தமகன் றனைச்சுடநான் வந்தே னையா
வறியேற்குப் பொருளுளவோ வழங்க வென்றாள். |
(இ
- ள்.) எறிந்திடலும் உயிர் ஏங்க ஏங்கி - மன்னன் காலால்
எறிந்தவுடன் உயிர் சோரும்படி சந்திரமதி ஏக்கங்கொண்டு, வேனில் இடி
விழுந்தால் - வேனற்காலத்து இடிவிழுந்தால்; படி மிசையே அடி சாய்ந்து
ஆடி முறிந்து விழும் மரம்போல் - பூமியின்மேல் அடிப்புறம் சாய்ந்து
ஆடி முறிந்து விழுகின்ற மரத்தைப்போலச் சென்று, அடிமேல் வீழ்ந்து -
போய் அரிச்சந்திரனுடைய கால்களிலே விழுந்து, வல்லி மொழி குழறி
விழி அருவி சொரிய - வல்லிக்கொடிபோன்ற சந்திரமதி வார்த்தை குழறிக்
கண்களிலிருந்து கண்ணீர் சொரிய, இவ்வூரில் வழங்கும் நீதி அறிந்தும்
இலன் - இவ்வூரில் வழங்குகின்ற நீதியை நான் அறியேன், அரு
வினையேன் - கொடிய பாவவினை உடையேன், ஆரும் இலி அறவும்
பாவி - யாரும் இல்லாதவள் மிகவும் பாவி, மறிந்த மகன் தனைச் சுட
நான் வந்தேன் ஐயா - இறந்துபோன மகனைச் சுடுவதற்கு நான் வந்தேன்
ஐயா!, வறியேற்குப் பொருள் உளவோ வழங்க என்றாள் - வறுமையுடைய
என்னிடத்தில் உனக்குக் கொடுக்கப் பொருள் உண்டோ? ஒன்றும்
இல்லை என்றாள்.
சந்திரமதி
ஓடி அவன் காலில் விழுந்தது, இடிவிழுந்த அடி சாய்ந்த
மரம் ஒடிந்து நிலத்தில் வீழ்ந்ததுபோல இருந்தது என்று உவமை கொள்க.
'ஏடி மூடி!' என்று அவன் சினந்து கூறிய சொற்கள் இடிபோல இரு
செவிகளிலும் விழுந்தன. அவள் மரம்போலப் போய் விழுந்தாள் என்க.
'இவ்வூரில் பிணஞ்சுடுவதற்குக் கூலி இன்னது என்பது எனக்குத்
தெரியாது, அன்றியும், எனக்குச் சுற்றமில்லை; பொருளில்லை; நான் பாவி
! என் மகனைச் சுடத் தனியே வந்தேன்; பொறுத்தருள்க' என்று
கெஞ்சினாள்.
(38)
|
'எனக்குச்
சுற்றமும் பொருளுமில்லை' என்று சந்திரமதி
தன்
குறை கூறுதல்
|
1015. |
பொருளுடையேன்
றமருடையே னானா லிந்தப்
புத்திரனைத் தோண்மீது வைத்துப் போந்திவ்
விருளிடையிற் சுடலையில்வந் தெய்து வேனோ
எரிந்தகுறைக் கட்டையினி லேற்று வேனோ |
|