பக்கம் எண் :


494

தெருளுடையா யறமுடையாய் வினையே னீன்ற
   சிறுவனையான் சுடக்கருணை செய்யாய் தேயா
அருளுடையா யாதார மற்றேற் குன்றன்    அடியிணையே தஞ்சமென வலறி வீழ்ந்தாள்.

     (இ - ள்.) பொருள் உடையேன் தமருடையேன் ஆனால் - நான்
பொருள் உடையவளாகவோ அல்லது சுற்றத்தார் உடையவளாகவோ
இருந்தால், இந்தப் புத்திரனைத் தோள்மீதில் வைத்துப் போந்து - இந்த
மைந்தனைத் தோள்மேல் வைத்துக்கொண்டு வந்து, இ இருளிடையில்
சுடலையில் வந்து எய்துவேனோ - இந்த இருட்டில் சுடு காட்டில் வந்து
சேர்வேனோ, எரிந்த குறைக்கட்டையினில் ஏற்று வேனோ - எரிந்துபோன
குறைக்கட்டையில் ஏற்றிவைப்பேனோ, தெருள் உடையாய் அறமுடையாய்
- தெளிந்த அறிவும் அறமும் உடையவனே!, வினையேன் ஈன்ற சிறுவனை
யான் சுட கருணை செய்யாய் - பாவியாகிய யான் பெற்ற இச் சிறுவனை
யான் சுடுவதற்குக் கருணை செய்வாயாக, தேயா அருள் உடையாய் -
குறையாத கருணை யுடையவனே!, ஆதாரம் அற்றேற்கு உன்றன்
அடியினையே தஞ்சம் என அலறி வீழ்ந்தாள் - துணையும் ஆதரவும்
இல்லாத எனக்கு உன்னுடைய திருவடிகளே அடைக்கலம் என
அலறிக்கொண்டு கீழே விழுந்தாள்.

     'நான் சுற்றமும் பொருளும் இல்லாதவள் என்பது நான் சொல்லிக்
காட்டவேண்டுமோ? நான் தனியே பிள்ளையைத் தோள்மேல் வைத்து
நடுச்சாமத்தில் வந்து குறைக்கட்டைகளில் வைத்துச் சுடத் தொடங்கியதே
சான்றாகுமன்றோ? அறிவுடையவன் அறமுடையவன் அருளுடையவன் நீ
ஆதலால் ஆய்ந்து சுடுவதற்கு அருள்புரிவாய்; உன்னையன்றிப் புகல்
இல்லை' என்று பின்னும் கெஞ்கினாள்.
                                                    (39)

    'காற்பணமும் கொள்ளி யாடையும் கொடுக்கவே
            வேண்டும்' என்றல்
  
1016. பொன்னனையாய் விடுவிடுயான் புலைய னென்னிற்
   புலையனும்அல் லேன்புலையற் கடிமை கண்டாய்
என்னடிநீ தீண்டுவது தகாது நீதான்
   இப்பொருட்கியா னுரியனலே னென்னை யாள்வோன்
சொன்னபணங் காலுண்டு கொள்ளி ஆடைத்
   துண்டமுமொன் றுண்டுதந்து சுடுதி யன்பால்
அன்னவன்றான் படியாக எனக்குத் தந்த
   வாய்க்கரிசி யானளிப்பே னறிதி என்றான்.

       (இ - ள்.) பொன் அனையாய் விடு விடு யான் புலையன்
என்னில் - திருமகளைப்போன்றவளே! என்னை விடுவிடு, யான்
புலையனோ என்றால், புலையனும் அல்லேன் புலையற்கு அடிமை
கண்டாய் - யான் புலையனும் அல்லேன் புலையனுக்கு
அடிமையானவன்காண், என் அடி நீ தீண்டுவது தகாது - என்
கால்களை நீ தொடுவது தகாது, இப்பொருட்கு யான் உரியன்
அலேன் - இப் பொருளுக்கு யான் உரிமை உடையவன் அல்லேன்,